Monday, December 29, 2008

வருக 2009

எழுந்த பெட்ரோல் விலை குறையட்டும்
வீழ்ந்த பொருளாதாரம் எழுகட்டும் !

பங்கு சந்தைகள் ஏறட்டும்
பணவீக்கம் தணியட்டும் !

நித்தம் ஒரு குண்டு என்ற
நிலைமை மாறட்டும் !
நிம்மதியாய் மக்கள்
பெரும் மூச்சு விடட்டும் !

போருக்கு அஞ்சும் அரசியவாதிகளை
வரும் ஆண்டு மாற்றட்டும் !
மரணம் என்பது பொதுவென்று
எதிரிக்கு நம் படை காட்டட்டும் !

இடிந்த போன தமிழீழம்
இனி மேலாவது வாழட்டும் !
இலங்கையின் அரசியலுக்கு
இயற்கை பதில் சொல்லட்டும் !

ஈழத்தை பற்றி பேசும் போது
காதை கூர்மையாய்
தண்ணீர் பற்றி பேசும் போது
மந்தமாய் கேட்கும் காதுகள்
தெளிவாய் கேட்கட்டும் !

மரங்களாக வாழ்ந்த தமிழர்கள்
புத்தாண்டில் மனிதனாக வாழட்டும் !

('கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீட்டு விழாவில் சொன்ன கவிதை )

Friday, December 19, 2008

என் பார்வையில் அண்ணா

பகுத்தறிவு பெரியார் பேச்சில் - செருப்பை
பரிசாய் பெற்ற போது…
பக்குவமாய் பேசி - மக்களிடம்
பல கை தட்டல்கள் பெற்றவர் !

பயணங்களில் நண்பர்களை தவிர்த்து
புத்தங்களை நண்பர்களாக கொண்டவர் !
பதவி வந்ததும் தன் சம்பளத்தை
பாதியாய் குறைத்து ஆடம்பரத்தை தவித்தவர் !

சுயமரியாதை திருமணத்தை
சட்டமாய் அரங்கேற்றியவர் !
சென்னைக்கு ‘தமிழ் நாடு’ பெயரிட்டு
சரித்திரப் பக்கங்களில் முத்திரை பதித்தவர் !
தள்ளி இருந்த திருவள்ளுவரை
திரும்பும் அரசு அலுவலகத்தில் மாட்டியவர் !
பேச்சும், எழுத்தும் தன் கட்சியின்
பெரும் சொத்தாக கருதியவர் !

நித்திரை பொழுதிலும்
முத்திரை பேச்சால்
ஒவ்வொரு இரவும் நினைவில் நின்றார் !
தீ பறக்கும் முயற்சியால்
தமிழர்கள் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றினார் !

'அண்ணா' என்ற உறவு
அண்ணாதுரை பெயரால் சிறப்பானது !
திராவிடக் கழகத்தால்
தமிழனின் முத்கெலும்பு நிமிர்ந்தது !

நூறு கவிஞர்கள் எழுதிய 'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' என்ற தொகுப்பு நூலில் இக்கவிதை இடம் பெறுகிறது.

Wednesday, December 17, 2008

ஞாபகங்கள்

பள்ளி பருவத்தில் பிரிந்த தோழனை
நடு சாலையில் அழுது வாங்கிய பொம்மை
விளையாட்டில் நண்பனிடம் போட்ட சண்டை
தந்தை கரம் பிடித்து நடந்த நடை
நினைத்தால் நரம்புகளும்
நவரச கீதம் பாடும் ஞாபகங்கள் !

பகைமை தூண்டிவிடம் நினைவுகள்
காமத்திற்காக காதலிக்கும் காதலர்கள்
கருணை மறந்த கள்வர்கள்
கர்மத்தை செய்து காலத்தை ஓட்டுபவர்கள்
நினைத்தால்
நித்திரை கெடுக்கும் ஞாபகங்கள் !

மறதியை பரிசளித்த இறைவனே
தேவையில்லாவற்றை அழித்து விட்டு
தேவையானவற்றை நினைவுப் படுத்த....
கணிப்பொறிப் போல்
மனதை படைத்தால் என்ன ?

தேவையில்லாத ஞாபகங்களின்
உன் ஞாபகத்தை மறந்தேன் !
பல மதக்குழப்பத்தில்
நீயும் என் ஞாபகத்தை மறந்தாய் !

மறதிலும் இறைவன்
ஞாபகமாய் சொன்னான் -

“மறதி மனிதனுக்கு மட்டுமல்ல
மகேஸ்வரனுக்கும் பொதுவென்று”

அறிமுகம்

கருவில் வந்த குழந்தைக்கு
அன்னையின் ஸ்பரிசம் அறிமுகம் !
உறவினர்கள் தீண்டலில்
குழந்தைக்கு கண்ணீர் அறிமுகம் !
கண்ணீர் சிந்தி செல்லும் போது
பள்ளிக்கூடம் அறிமுகம் !
விளையாட்டில் நண்பர்களிடம்
போடும் சண்டை அறிமுகம் !

கன்னியிடத்தில் வரும்
முதல் காதல் அறிமுகம் !
ஜனனம் வாழ்க்கையின்
தொடக்கத்தின் அறிமுகம் !
மரணம் வாழ்க்கையின்
முடிவில் அறிமுகம் !
மற்ற அறிமுகங்கள் வரும் நாட்களில் ...
பழகிய முகம் !

முதல் தேர்வு
முதல் போட்டி
முதல் காதல்
முதல் முயற்சி
அனைத்திலும் வென்றவர்
வரலாறு படைப்பதில்லை !

தோல்வியின் அறிமுகத்திற்கு அஞ்சினால்
வெற்றியின் அறிமுகம் கிட்டாது !
வெற்றி கிட்டும் வரை
உன் பிறப்புக்கு மதிப்பு கிடையாது !

மரணத்திற்கு நீ அறிமுகம் ஆகும் முன்பு
உலகிற்கு அறிமுகம் ஆகிவிடு !

உலகிற்கு நீ அறிமுகம் ஆகும் போது
உன் வெற்றி மட்டுல்ல ...
தோல்விகளுக்கும் வரலாறு ஆகும் !

ஓவ்வொரு தோல்வியில் கற்றுக்கொள் !
வெற்றிக்கு அறிமுகம் ஆகும் வரை
தோல்வியை ஏற்றுக்கொள் !

Monday, December 15, 2008

தொலைப்பேசி தேவதை

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். ஆனால், கடன் கொடுப்பாதற்காகவே நீ என்னை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டாய்.

" நாங்க XXX வங்கியில இருந்து பேசுறோம். உங்க சம்பள தகுந்த மாதிரி உங்களுக்கு Personal loan தரோம். உங்களுக்கு லோன் வேணுமா...?" - இரண்டே வரியில் முடிந்தது உன் குரல்... இல்லை உன் குறள்.

என்னை கடனாளியாக்குவதில் உனக்கு எத்தனை ஆசையோ ? இது போன்ற தொலைப்பேசிகளை துண்டிப்பவன் நான். ஆனால், உன் குரலை மீண்டும் கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி கேட்டேன். என்னை கடனாளியாக்கும் ஆர்வத்தில் நீயும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாய்.

அப்துல் கலாமின் "தொலை நோக்குப் பார்வை 2020" படித்திருக்கிறேன். ஆனால் தொலைப்பேசி தொடர்புக் கொள்ளும் தேவதை உன் முகம் பார்க்க முடியவில்லை. தொலைப்பேசியில் தினமும் இது போன்ற தொல்லை கொடுப்பாயா ? என்ற கேட்க தோன்றியது.

பணத் தேவை இல்லாத போதும் உன் முகம் பார்ப்பதற்காகவே உங்கள் வங்கியின் சேவையை விரும்பினேன். இதற்காக தான் பெண்களை வைத்து தொலைப்பேசியில் அழைக்க சொல்கிறார்களோ ? அதன் பிறகு நீ கேட்ட கேள்விகள் எல்லாம் என் மனதிலே நிற்கிறது.

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் ? எங்க வேலை செய்றீங்க ? இதுக்கு முன்னாடி வேற எந்த பேங்க்ல லோன் வாங்கினிங்கலா ? உன் கேள்வி தனைகளை நீ தொடர்ந்துக் கொண்டே போனாய்.

நீ கேட்கும் கேள்விகள் எல்லாம் வங்கி கடன் கொடுப்பதற்காக கேட்பது போல் தெரியவில்லை. என் வாழ்க்கை துணையாக வருவதற்கு கேள்வி கேட்பது போல் இருந்தது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தொலைப்பேசியில் தொடர்ப்புக் கொள்வது. உன்னை பார்க்கும் ஆசை மனதில் துளிர் விட தொடங்கியது. உனக்காகவே உன் வங்கியில் கடன் வாங்க சம்மதித்தேன்.

என் அலுவலகத்திற்கு ஒருவன் வந்து உன் வங்கியில் இருந்து வருவதாக சொன்னான். உன் வங்கி மிகவும் மோசம். தொலைப்பேசியில் பெண்களை பேசவிட்டு நேரடி தொடர்புக்கு ஆண்களை நியமித்து இருக்கிறார்கள். வந்தவன் நீ தொலைப்பேசியில் சொன்ன உன் வங்கி விதி முறைகளை சொல்லிக் கொண்டு இருந்தான். உன் குரலின் நினைவில் நான் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மனமோ உன்னை பார்க்க புலம்பியது. என்னால் எனக்கே ஆருதல் சொல்ல முடியவில்லை. என்னை சந்திக்க வந்தவன் வங்கி முகவரி கொடுத்து சென்றான். உன் முகம் காண உன் வங்கி முகவரிக்கு வந்தேன். உன் பெயரை சொல்லி உன் இருப்பிடத்தை கேட்டேன். அதோ அங்கு இருப்பதாக ஒருவர் சொல்ல, சற்று அதரிந்தே உன்னை பார்த்தேன். கோயில் சிலையாக இருக்க வேண்டியவள் வங்கி ஊழியராக இருப்பாதா ? உனக்கும் சேர்த்து என் ஒருவன் வருமானம் பொதும். "வேலையை விட்டு வா" என்று செல்ல என் நாவு துடித்து. அறிமுகம் இல்லாதவனின் வார்த்தையை நீ எப்படி நம்புவாய். இதோ என்னை உனக்கு அறிமுகம் படுத்த என் கால்கள் உன்னை நெருங்க தொடங்கியது.

உன்னை நெருங்கியதும் என்ன பேசுவது என்று தெரியாமல்.... அங்கு இருக்கும் வங்கி ச்சலானை எடுத்து வந்துவிட்டேன். உன்னிடம் பேச மனதில் ஆசையிருக்கும் அளவிற்கு பேசும் வார்த்தைகளில்லை. நீ குரலில் குயில் என்றால், நிறத்தில் முயல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிறமே என்னை பேசவிடாமல் செய்து விட்டது.

உன் வரவுக்காக உன் வங்கி வாசலில் காத்துக் கொண்டு இருந்தேன். உன் அழகில் அதிர்ந்தவனை இன்னொரு அதிர்ச்சி கொடுப்பாய் என்று நினைக்கவில்லை. என் அலுவலகத்திற்கு வந்து உன் வங்கியை பற்றி பேசியவனுடன் வந்துக் கொண்டு இருந்தாய். என் கண் முன்னே நீ அவன் வண்டியில் ஏறி சென்றாய். ஒரு நாள் உன் குரலை கேட்ட எனக்கே உன் மீது ஆசை வரும் போது தினமும் உன்னை பார்ப்பவனுக்கு ஆசை வராதா.....? அவன் எனக்கு முன்பே உன்னை பார்த்ததால் அவன் உன் காதலை வென்று விட்டான். நான் உன்னை பார்ப்பதில் பிந்திக் கொண்டதால்.... நீங்கள் போவதை பின்னாடி இருந்து பார்க்கிறேன்.

Friday, December 12, 2008

மனித உரிமை

மனிதனுக்கு ஓட்டுப்போட உரிமை உண்டு
தேர்ந்து எடுத்த தலைவரை
நீக்க உரிமை இல்லை !

தவறு செய்ய உரிமை உண்டு
தட்டிக் கேட்பவரை வெட்டுப்படுவதால்
நியாயம் கேட்க உரிமை இல்லை !

பிள்ளைகளைக் கருவில் சுமக்க உரிமை உண்டு
லட்சங்கள் இல்லாமல்
கல்லுரியில் சேர உரிமை இல்லை !

மேல்நிலைப் பள்ளி வரை
படிக்க உரிமை உண்டு
ஜாதி இல்லாமல் பள்ளியில்
சேர்க்க உரிமை இல்லை !

போர் நடக்கும் போது
மனித உரிமைகள் பறிக்கப்படும்
-அது இந்திய அரசியல் சட்டம் !

போர் நடக்காத போது
மனித உரிமைக்ள் மீற்ப்படும்
-இது துரோகிகளின் திட்டம் !

மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை
மனித உரிமைகள் மீறப்படுகின்றன !!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூலின் 9வது கவிதை

Thursday, December 11, 2008

வாழ்க ! வாழ்க ! பாரதி வாழ்கவே !!

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதி பிறந்த தமிழ் நாடு !
சிந்தனை பிறந்தது எந்நாளாம்
சிந்து பாடும் பாரதி பிறந்த நாளாம் !

தன் திம்தரிகிட பாட்டால்
தமிழனை தட்டி எழுப்பினார் !
தன்னலம் பாராமல் எழுதியதால்
தருமி போலவே வாழ்ந்தார் !

வறுமை, அலச்சல்
ஒரு கவிஞனை உருவாக்கும் சமையல் !
இதை உணர்த்திய
பாரதி ஒரு கவிச் செம்மல் !

அச்சத்தை தவிர்க்க வைத்தாய் !
மானத்தை போற்ற வைத்தாய் !
ரௌத்திரத்தை பழக செய்தாய் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டாய் !!

ஆதலால்,
" நான் கவிஞன்
எனக்கு தொழில் கவிதை "
என்று சொல்லும் துணிச்சல் எனக்கில்லை !
எழுத்தும், வறுமையும் ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை !!

வாழ்க பாரதி
வாழ்க பாரதம் !!

( விக்கிரமன், அதீனன், ம.நடராஜன் தலைமையில் பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா (11.12.2008) அன்று, எட்டையப்புரத்தில் நடந்தது. அங்கு, 'பாரதி மணி' மண்டபத்தில் நான் சொன்ன கவிதை.)

Tuesday, December 02, 2008

ஜாதிக்கு இளமை குறையவில்லை

ஜாதியை ஒழிக்க வந்த மனிதர்கள்
வயதாகி இறந்தார்கள்
ஆனால்
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

பிறந்த நாள் சான்றிதழ்
பள்ளிக்கூட சான்றிதழ்
கல்லூரி சேர அனுமதி
திருமணத்துக்குப் பெண் பார்க்க
சுடுகாட்டில் புதைக்க
மனிதர்கள் வயதாகி இறந்தாலும்

ஜாதியை இளமை குறையாமல் வாழவைக்கிறார்கள்!

தமிழ் இளமையுடன் இருப்பதால்
தமிழர்களுக்குப் பெருமை!
ஜாதி இளமையுடன் இருப்பதால்
மனிதர்க்ள் வாழ்கையில் கொடுமை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

மனிதனின் இதயத்தில்
லட்சியம் விதைக்கப்பட்டிருந்தால்
பல வெற்றி மரங்களுக்கு
விதைகள் போட்டிருப்பான்!

மனிதனின் இதயத்தில்
ஜாதி விதைக்கப் பட்டதால்
பல ஜாதி சங்கங்களைத்
தொடங்கி வருகிறான்!

விதைத்த ஜாதியை
வேருடன் அழிக்க
மனிதன் மனிதர்களை
வெட்டி அழித்துக் கொண்டார்கள்
இறந்தது மனிதர்கள் மட்டும் தான்
ஜாதிகள் இல்லை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 25வது கவிதை

காதல் கொடுத்த தேவதை

நட்பு என்று ஒரு புனிதம் உண்டு... காதலுக்கென்று புனிதம் உண்டு... இந்த இரண்டுக்கு இடைப்பட்ட உறவு என்றுமே குழப்பம் தான்..... மிகவும் கொடுமை கூட. அவளிடம் பழகுவது காதல் என்று மனம் சொல்லும். ‘நட்பை தவறாக நினைக்காதே’ என்று அறிவு எதிர் வாதம் செய்யும். இந்த குழப்பத்தில் எத்தனையோ இளைஞர்கள் மாட்டிடுக் கொண்டு இருக்க நான் மட்டும் விதி விளக்கா என்ன ?

நான் உன் வீட்டுக்கு வந்துயிருக்கிறேன்.... ஒரு நண்பனாக. நீயும் என் வீட்டுக்கு வந்திருக்கிறாய்... ஒரு தோழியாக. நாம் இருவரின் நட்பு நம் இரு வீட்டுக்கும் தெரியும். இப்பொது உன்னிடம் காதல் சொன்னால், நம் இரு வீடும் நம் இதுவரை பழகிய நட்பை என்னவென்று சொல்வார்கள் ?

நம் பெற்றோர்களை கூட சமாளித்து விடுவேன். நீ என்ன நினைப்பாய் ? இதுவரை நான் உன்னிடம் பழகிய நட்பை நீ தவறாக புரிந்துக் கொண்டால்.... நான் என்ன செய்வேன் ? உன்னிடம் பேசுவதே போதும் என்று நினைத்தாலும்.... சொல்ல வேண்டும் என்று என்னை தூண்டுகிறதே இந்த ‘காதல்’.

‘கடவுள் இல்லை’ என்று சொல்பவன் நான்.... திருநீர் நீ தருவதால் நெற்றியில் புசிக்ககொள்கிறேன். கோயிலுக்கு செல்லாததவன் நான்..... வியாழக்கிழமை ராகவேந்திர கோயிலுக்கு நீ வருவாய் என்பதற்காக நான் வருகிறேன். அவ்வப்போது நீ செய்யும் ஜாடைகள்.... என் மீது உனக்கு காதல் இருக்குமோ என்று நினைக்கும் லீலைகள்... பிறகு அது நட்பு என்று நீ சொல்லும் வார்த்தைகள்... உன் ஒவ்வொரு அசைவுகளையம் என் இதயம் செமிக்கும் வங்கி கணக்குகள்.

உன்னை காதலிக்கும் ஆடவர்களின் பெயர்களை என்னிடம் பட்டியலிட்டு சொல்கிறாய்..... நான் உன்னிடம் என் காதலை சொல்லிவிட்டால்... நானும் உன் பட்டியலில் வந்துவிடுவேனோ என்ற அச்சம் வந்தது.... இருக்கும் கொஞ்ச தைரியம் கூட போனது.

நீ நெருக்கமாக பழகும் ஆண்களை பற்றி சொல்கிறாய்.... எனக்கு பொறாமை ஏற்ற நீ செய்யும் உள் நோக்கமா என்ற சந்தேகம்... ஆனால், நண்பனிடம் தான் எல்லா உண்மையும் சொல்ல முடியும் என்று நீ சொல்லும் போது என் சந்தேகங்கள் எல்லாம் தவிடு பொடியானது.

ஜாடை வார்த்தைகளால் ‘காதல்’ என்று நினைக்க வைக்கிறாய்.... ‘காதல் மீது நம்பிக்கை இல்லை’ என்று சொல்லி உனக்கு காதல் வராது என்று நினைக்க வைக்கிறாய் !
பார்த்தவுடன் காதல் சொல்பவர்கள் உண்டு.... காதலுக்காகவே பெண்ணிடம் பழகி காதல் சொல்பவர்கள் உண்டு.... என் மனம் உன்னிடம் இதுவரை எதையும் எதிர்ப்பார்த்தில்லை. ஆனால் , காதல் தென்றல் வீசிய பிறகு.... நம் நட்பு புயலாக என்னை கொன்று கொண்டு இருக்கிறது. நட்பை கொன்று காதலை சொல்வதா ? காதலை மறந்து நட்பை வளர்ப்பதா ? காதல் வந்த பிறகு தினமும் என் மனதில் இதே போராட்டம் தான்.

திடிர் என்று ஒரு நாள் என்னடம் ஒரு கேள்வி கேட்டாய் “இப்போ ரொம்ப பேரு... பிரண்ட்ஸ் பழகி லவ்வர்ஸ் ஆகுறாங்ளே. அதப்பத்தி நீ என்ன நினைக்குற...?” என்றாய்.

இது தான் சரியான தருணம் நான் பதிலளித்தேன்.
“இன்னைக்கு பல பேர் கல்யாண வாழ்க்கையில எல்லோரும் நண்பர்கள் போல வாழனும் நினைக்கிறாங்க... யாரோ ஒருத்தரை இல்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணி நண்பர்கள் போல இருக்குறதக்கு... நமக் கூடவே நல்ல பழகினவங்கள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லனு நினைக்குறாங்க.... கல்யாணத்துக்கு அப்புறம் பிரண்ட்ஸீப் தொடரது நல்ல விஷயம் தானே !! ” என்றேன்.

என் பதில் கேட்டு என்னை பார்த்து மெல்ல சிரித்தாய். நம் நட்பு காதலாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நம் நட்பின் பயணத்தை தொடர்க்கின்றேன்.

Wednesday, November 19, 2008

விலை மதிப்பற்றது

பங்கு சந்தையில்
ஒரு பவுன் தங்கம் ஒன்பதாயிரம் ரூபாயாம்
எனக்கு மளிவாய் பத்து ரூபாய்க்கு கிடைத்தது
கோதையவள் கைப்பட்ட
ஒரு ரூபாயை பத்து ரூபாய் கொடுத்து வாங்கினேன் !

குளிர்பான கடையில்
குளிர்பானம் பத்து ரூபாயாம்
எனக்கு சற்று குறைந்த விலையில் கிடைத்தது !
வஞ்சியவள் வாய்ப்பட்ட மீதி குளிர்பானத்தை
குறைந்த விலை கொடுத்து வாங்கிவிட்டேன் !

புத்தகடையில்
ஒரு காகிதம் ஒரு ரூபாயாம்
எனக்கு மட்டும் இலவசமாய் கிடைத்தது
பாவையவள் புத்தகத்தில் வந்த காகிதம்
அவளுக்கு தெரியாமல் எனக்கு சொந்தமானது !

விலை உயர்ந்த பொருள்
எனக்கு மலிவாய் கிடைத்தது !
மலிவாக விற்கப்படும் பொருள்
எனக்கு இலவசமாய் கிடைத்தது !

விலை உயர்ந்த காதல் மட்டும்
என்னையே
விலையாக கொடுத்தும் கிடைக்கவில்லை !

காதலியின் தேவையில்லாத பொருள்
காதலனுக்கு நினைவு சின்னமாய் இருக்கும் !
காதலனின் நினைவிடம் கூட
காதலிக்கு தேவையில்லாத இடாமாக இருக்கும் !

காதலியின் கைப்பட்டதால்
விலையில்லாத பொருள்
எனக்கு விலை மதிப்பற்றது !
காதலியின் பார்வை
என மீது இல்லாததால்
என் உயிர் விலை இல்லாமல் போனது !

Monday, November 10, 2008

வன்முறை தேவதை

எப்படி இவள் என் மனதில் வந்தாள். எதற்காக என் மனம் அவளை விரும்பியது. எனக்கு அவளை தவிர வேறு பெண் தான் பூமியில் இல்லையா என்ன ? இருந்தும் அவளை தேடியே என் மனம் செல்வதை உணர்கிறேன்.

இது வரை அவளிடம் இரண்டு வருடங்களாக தோழியாக கூட பழகவில்லை. அவளிடம் சண்டை தான் போட்டிருக்கிறேன். அவள் அவ்வளவு பெரிய அழகி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இப்பொது எல்லாம் அவள் தான் எனக்கு அழகியாக தெரிகிறாள்.

அவளிடம் பழகிய ஆரம்ப நாட்களை நினைத்து பார்க்கிறேன். அவளிடம் பேச தொடங்கியதே சண்டையில் இருந்து தான். ஐய்யோஸ! பேச தொடங்கி விட்டால் வாயை மூட மாட்டாள். அவள் மிக பெரிய வாயாடி. யாராக இருந்தாலும் பேசியே விரட்டி விடுவாள்.

என் நண்பன் கூட பல முறை அவளை திமிர் பிடித்தவள் என்று என்னிடமே சொல்லியிருப்பான். நானும் அதை ஆமோதித்து இருக்கிறேன். அவளிடம் யார் மாட்டிக் கொள்ள போகிறானோ என்று பல முறை நானே நினைத்து இருக்கிறேன். அந்த அப்பாவி நானாக இருப்பேன் என்று நானே நினைத்ததில்லை.

கணவன் மனது நோகாமல் நடந்துக் கொள் என்று மகளிடம் தாய் சொல்வது போல் அவளிடம் நோகாமல் நடந்துக் கொள் என் காதலே என்று காதலுக்கு அறிவுரை கூறிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் என் காதல் அவளை நோகடிக்கவில்லை. என்னை படாத பாடு படுத்திக் கொண்டு உள்ளது.

அந்த திமிர் பிடித்தவளுக்கு என் காதலை சொல்லி விடலாமா என்று நினைத்தேன். அவளிடம் இருக்கும் திமிர் காதலை சொல்ல தடுத்தது ....என் தன்மானம். ஆண்ணிடம் அடக்கமாக நடந்துக் கொள்ளும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்க ஆண்களை மதிக்காத அவளையா என் மனம் விரும்புவது. என்ன செய்வது காதல் மதியாதார் தலை வைத்து தானே மிதிக்கும்.... காதலுக்கு தன்மானம் சற்று குறைவு தான். அதே சமயத்தில் காதல் தன்மானத்தை இழப்பது பெண் மானத்தை காக்கும் நல்ல பணியில் தான் என்பதால் அதை யாரும் தவறாக நினைப்பதில்லை.

எதோ சில சண்டைகள் போட்டோம். அதன் பிறகு சமாதானம் ஆகிவிட்டோம். இது நட்பு என்று எப்படி சொல்வது ? இலங்கை தமிழர்கள் பிரச்சனை சமாதானம் சற்று நேரம் தான். மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சண்டையை தொடங்கி விடும். நாங்கள் கூட அப்படி தான். சில நேரம் சமாதானம் ஆகிவிட்டது போல் தோன்றும். ஆனால் எதோ பிரச்சனை எங்களுக்குள் சண்டையை மூட்டிவிடும். என் காதலை சொல்லிவிட்டால் இதுவும் சண்டை அடித்தளம் அமைத்து விடமோ என்ற அச்சம். அது கூட பரவாயில்லை. இனி என்னிடம் பேச நிருத்தி விட்டால் இனி சண்டைக்கு கூட வாய்பில்லாமல் போய்விடும்.

"சரி விடுடா" இப்போதைக்கு காதல் சொல்ல வேண்டாம் என்று என் மனம் சொன்னது. மனம் சொல்லும் படி நடப்போம் என்று என் வேலையை செய்துக் கொண்டு இருந்தேன். உன் தோழி ஒருத்தி என்னிடம் பேச வந்தாள். உனக்கு இப்படி ஒரு நல்ல தோழியா என்று இவளுக்காக பரிதாபம் பட்டிருக்கிறேன்.

உன் தோழியிடம் சிரித்துக் கொண்டு பேசியிருப்பதில் எனக்கு நேரம் போனதை கவனிக்கவில்லை. சற்று தோலைவில் நீ எங்களையே பார்த்துக் கொண்டு இருப்பதை கூட நான் கவனிக்கவில்லை. நீ நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாய். வந்தவுடன் நீ உன் தோழியை திட்ட தொடங்கிவிட்டாய். எந்த காரணத்திற்காக உன் தோழியிடம் சண்டை போடுகிறாய் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உனக்கு மட்டும் சண்டை போடுவதற்கு காரணம் எங்கிருந்து தான் கிடைக்குமோ என்று தெரியவில்லை.

உன் தோழியிடம் சண்டை போட்ட பிறகு நீ என்னிடம் பாய தொடங்கிவிட்டாய். நீ எதுக்காக கோபப்படுகிறாய் என்று எனக்கு புரியவில்லை. கடைசியாக நீ சொன்ன வாக்கியத்தில் புரிந்துக் கொண்டேன். "இனிமே நீ என்னை தவிர எந்த பொண்ணுக்கிட்டயும் பேசக் கூடாது. அதையும் மிறி நீ பேசுறத பார்த்தேன்... உன்ன என்ன பண்ணுவேன் எனக்கு தெரியாது" என்று மிரட்டிவிட்டு போனாய்.

ஒரு மலர் இப்படி வெடித்து விட்டதை பார்த்து பேசாமல் வாயடைத்து நின்றேன். "டாய். இப்போ உன் காதலை நீ சொல்லலேனா... ஆண் வர்கத்திற்கே அசிங்கம்.... போய் உன் காதலை சொல்லுடா!" என்று மனம் சொன்னது. "காதலைக் கூட வன்முறையில் சொல்லும் அவளிடம் மாட்டிக் கொள்ள போகிறாயா" என்று என் அறிவு என்னை பார்த்து பரிதாபப்பட்டது. அறிவு சொல்லவதை செய்வதை விட மனம் சொன்ன படி நடந்துக் கொள் என்று விவேகானந்தரின் வாக்கு. அதன் படி நானும் நடக்கிறேன்.

Thursday, November 06, 2008

ஓவியனின் ஓவியம்

உன்னை வரைய
நிலவுக்கு சென்றேன்
நிலவு உன் முகம் போல் தெரிந்ததால்
அங்கு வரைய மனமில்லை !
சற்று உயரமாகப் பறந்து
நட்சத்திரத்திடம் சென்றேன்
அது உன் பற்கள் போல் இருந்ததால்
அங்கு வரைய இடமில்லை !

பகலில் சூரியனில்
வரைய சென்ற போது
உன் கண்களில் வரும் ஒளியை காட்டி
என் கண்கள் கூச செய்தது !

இறுதியாக உன்னை வரைய
மேகத்திடம் சென்ற போது
உன் தேகம் போல் இருந்ததால்
அங்கு வரைய கைகள் நடுங்கியது !

நான் உன்னை வரைய
இயற்கையிடம் இடம் கேட்டேன்
இயற்கை தன்னை வரைந்த
இறைவனிடம் கேட்க சொன்னது !

சற்று யோசித்ததில் புரிந்து கொண்டேன்
இறைவன் உன்னை போல்
இயற்கையை படைத்து விட்டான் !

உன்னை வரைய துடித்த ஓவியன் - நான்
உன்னை வரைந்து முடித்த ஓவியன் - இறைவன்
அதனால்,
என்னை விட சிறந்த ஓவியன்
இறைவன் ஆகிவிட்டான் !

அவன் படைத்ததில்
சற்று தவறு செய்துவிட்டான்
அவனுக்கு போட்டியாக
என்னையும் வரைந்து விட்டான் !

என்னை விட சிறந்த ஓவியன்
- இறைவன் !
அவனை விட பாக்யசாலி
- நான் !

Monday, November 03, 2008

என் புத்தம் புதியவளே

புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !
காதல் உணர்வைக் காட்டிய
எனக்கு நீ புதியவளே !
புதிய உறவை தந்த
காதலி நீ புதியவளே !
புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் பார்வையில் மௌனம் ஆனேன்
அது எனக்கு புதியது !
உன் நினைவில் தூக்கம் மறந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள்ளே நான் பேசிக் கொண்டேன்
அது எனக்கு புதியது !
தனியாகச் சிரித்து வழிந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள் பல புதுமைகள் செய்தவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

முதல் முதலாய் வெட்கம் வந்தது
அது எனக்கு புதியது !
உன் கண்ணில் என்னை பார்த்தேன்
அது எனக்கு புதியது !
காதலி உன் கொலுசின் ஓசை
அது எனக்கு புதியது !
நீ இல்லாமல் நான் வாழ்ந்தால்
அந்த தனிமை கூட புதியது !
எனக்கு புதிராய் விளங்குபவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய்ப் பூத்தவளே !

திருமண ஆசையில் துடித்தேன்
அது எனக்கு புதியது !
நான் போடும் மூன்று மூடிச்சு
அது எனக்கு புதியது !
காதலி எனக்கு மனைவி ஆனாய்
அது எனக்கு புதியது !
உன்னுடன் நான் இருக்கும்
அந்த முதலிரவு புதியது !
எனக்கு என்றும் இனியவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் உயிரை எனக்குள் வைத்தேன்
அது எனக்கு புதியது !
ஓர் உடலில் இரு உயிர் ஆனேன்
அது எனக்கு புதியது !
முத்த மழையில் நான் குளித்தேன்
அது எனக்கு புதியது !
உன் பிரிவில் நான் இறந்தால்
அந்த மரணம் கூட புதியது !
எனக்கு உயிராய் வந்தவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

Friday, October 31, 2008

அழகு

கவிதை பாடும் கவிஞனுக்கு
பார்க்கும் இயற்கை எல்லாம் அழகு !
தமிழ் கற்ற புலவனுக்கு
தமிழ் வார்த்தை ஒவ்வொன்றும் அழகு !
பசி வந்த மனிதனுக்கு
பார்க்கும் உணவெல்லாம் அழகு !
இதயம் தேடும் இளைஞனுக்கு
கன்னியரின் காதல் அழகு !

கோடி நட்சத்திரங்களின் நடுவில்
நிலவு ஒன்று தான் அழகு !
மொழிகளின் வார்த்தைகள் தெரியாமல்
மழலை பேசும் மொழி அழகு !
ஆடவரை மயக்கும் வேல்விழி இருந்தும்
கன்னிக்கு மை இடுவது அழகு !
பொன் நகையால் அலங்கரிக்கப்பட்டாலும்
பெண்ணுக்குப் புன்னகை அழகு !

உழைக்கத் தெரிந்த மனிதனுக்கு
வெற்றி பெறுவதே அழகு !
பத்து மாதம் கருவில் பிறந்த
குழந்தையின் கண்ணுறக்கம் அழகு !
அழகான பொருளை எல்லாம்
ரசிக்கும் நாட்கள் அழகு !
அழகை ரசிக்கும் போது மரணம் வந்தால்
அந்த மரணம் கூட அழகு !

அழகில்லை என்று
காதலைச் சொல்லாமல்
கண்ணீர் சிந்தும் நண்பா !
உன் கண்ணீர் துளியும் அழகு !
இந்த கண்ணீரை அவள் துடைத்தாள்
அந்த அழகி உனக்கு மட்டுமே அழகு !
காதலிக்காகக் காத்திருக்கும்
அழகான நாட்கள் அழகு !

நண்பா !
காத்திருப்பது
உண்மை காதலுக்கு அழகு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 14வது கவிதை

Sunday, October 12, 2008

வெற்றி நிச்சயம்

தனக்குத் தானே நண்பனாய் இருந்து
முன்னேற வேண்டிய மனிதன் !
தனக்குத் தானே கடவுளாய் இருந்து
தன் மரணத்தை தீர்மானித்துவிட்டான் !

தற்கொலைக்கு துணிந்தவனே
இதோ வழிப்போக்கனின் வார்த்தைகள்
ஏதேனும் காதில் வீழுந்தால்
முடிவை மாற்றிக் கொள்ளுங்கள் !

உன் உடலை எரித்தால்
உன் உடல் சாம்பலாய் வாழும் !
உன் சாம்பல் ஆற்றில் கரைத்தால்
ஆற்று மண்ணாக மாறும் !
உன்னைப் புதைத்தால்
எலும்பாய் மண்ணில் புதைந்து கிடக்கும் !

உயிரற்ற பொருளாய்
வாழ முடிந்த உனக்கு !
உயிருள்ள மனிதனாய்
வாழவும் முடியும் !

விரக்தி - அது வந்து செல்லும் காற்று
தோல்வி - காலப்போக்கில் தொலைந்துவிடும்
துயரம் - சில வினாடியில் மறைந்துவிடும்
மரணம் - வாழ்க்கையில் இறுதியாக வரும் விருந்தாளி!
விருந்தாளியை வரவேற்பது தான் முறை
தேடிச் செல்வது முறையல்ல !

வானத்தில் பறப்பது பறவை என்றால்
வானத்தில் பார்க்காத கோழியை என்ன சொல்வது ?
தண்ணீரில் வாழ்வது மீன் என்றால்
டால்பினை மிருக இனத்திலா சேர்ப்பது ?

வெற்றி காண்பவனும் மனிதன் என்றால்
தோல்வி காண்பவன் மரணத்தையா தேடுவது ?
உயிரற்ற பொருளாய் வாழ்வதைவிட
பல தோல்விகள் கண்ட மனிதனாய் வாழு !

இந்த தோல்விகள்
நிச்சயம் ஒரு நாள்
வெற்றியின் கதவைத்தட்ட வைக்கும் !

Sunday, October 05, 2008

சிவப்பு ரோஜா

காதலுக்கு பச்சைக் கொடி காட்ட
காதலியிடம் சிவப்பு ரோஜா !
நண்பா !
இது அபாய அறிகுறி !
அவளிடம் கேட்டுத் தெரிந்திக்கொள்
அந்த ரோஜா
உனக்கா இல்லை
உன் கல்லறைக்கா என்று !

Thursday, October 02, 2008

என் செல்லரித்த கவிதைகள்

என் பழைய புத்தங்களை
தூசு தட்டிக் கொண்டுருந்தேன்
திடீர் விருந்தாளிப் போல் கிடைத்தது
செல்லரித்துப் போன
என்னுடைய கிறுக்கல்கள்
இல்லை...
என்னுடைய கவிதைகள் !

என் வயதான கவிதைக்கு
நானே ரசிகனானேன்
வயதான கிழவி
பதினாறு வயது பருவ பெண்ணாக
என் கண்ணுக்குத் தெரிந்தாள் !

என் காலசக்கரத்தை
ஒரு முறை ஓட்டிப்பார்த்தேன்...
வகுப்பறையில் கவிதை எழுதிய
நாட்களை நினைத்துப் பார்க்க..!

சில கவிதைகள்
என் நண்பர்களின் காதலுக்கு
உதவுவதற்காக எழுதியது !
இன்னும் சில கவிதைகள்
பக்குவமில்லாத
என் காதலைப் பற்றி எழுதியது !
ஒரு சில கவிதைகள்
என் தோழிகளை பொய்யாக
வர்ணித்து எழுதியது !
மூன்று கவிதைகள்
எனக்கு பரிசு
வாங்கி கொடுத்தது !

என் கவிதையின் பிழையை திருத்திய
தமிழ் ஐயா நினைவுக்கு வந்தார் !
என் கவிதையை ரசிக்கும்
தோழிகள் மின்னலாய் வந்தனர் !
காதலிக்கு கவிதை கேட்ட
நண்பர்கள் அலையாய் சென்றனர் !

பல முறை நினைத்துப் பார்த்தும்
வாழ்ந்த நாட்கள் தான் நினைவுக்கு வந்தது !
மீண்டும் அந்த நாட்கள் சென்று
வாழ முடியவில்லை !

தூசு தட்டி விட்டு
பழைய புத்தகங்களை
இருக்கும் இடத்தில் வைத்துவிட்டேன்
மீண்டும் செல்லரித்துப் போவதற்கு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 18வது கவிதை

Monday, September 22, 2008

கண்ணீர்

கண்ணீரில் வாழும் மனிதனே !
உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !

பிறக்கும் போது
ஏன் பிறந்தோம் என்று கண்ணீர் !
ஐந்து வயதில்
ஒரு பொம்மைக்காக கண்ணீர் !

பத்து வயதில்
படிப்பதற்காக கண்ணீர் !
பதினைந்து வயதில்
மதிப்பெண்ணுக்காக கண்ணீர் !

இருபது வயதில்
பெண்ணின் காதலுக்காக கண்ணீர் !
இருபத்தைந்து வயதில்
வேலைக்காகக் கண்ணீர் !

முப்பது வயதில்
திருமணத்திற்காக கண்ணீர் !
முப்பத்தியைந்து வயதில்
திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணீர் !

நாற்பது வயதில்
பிள்ளை பெறுவதற்காகக் கண்ணீர் !
நாற்பத்தைந்து வயதில்
பணத்துக்காகக் கண்ணீர் !

ஐம்பது வயதில்
பிள்ளைகள் எதிர்காலத்துக்காகக் கண்ணீர் !
ஐம்பத்தைந்து வயதில்
பிள்ளை திருமணத்துக்காக கண்ணீர் !

அறுபது வயதில்
முதியோர் இல்லத்தில் கண்ணீர் !
அறுபத்தைந்து வயதில்
மரணத்தைக் கண்டு கண்ணீர் !

உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !
இறைவா !
எனக்கு இன்னொரு உலகம் கொடு !
அங்கு சிரிக்கும்
மனிதர்களை மட்டும் கொடு !
சர்க்கரை போல் இனிக்கும்
கடலைக் கொடு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 10வது கவிதை

Wednesday, September 17, 2008

முதியோர் இல்லம்

ருசி பார்க்க பற்களில்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
ஆதரவாய் பேச பிள்ளைகளும் இல்லை
முதியோர்களுக்குக் கிடைத்தது
முதியோர் இல்லம் என்னும்
திறந்த வேலி சிறைவாசம் !

ஆயுள் முடியும் காலத்தில்
ஆயுள் முடியும் வரை
இங்கு உள்ளவருக்கு விடுதலையில்லை !

பிள்ளைகளின் குடை
நிழல் கொடுக்க மறுக்க
திறந்த இடத்தில்
நிழலை தேடுகிறார்கள் !

தவளமும் வயதில்
நடைபயில கைகள் தேடினான் !
பத்து வயதில்
விளையாட நண்பர்கள் தேடினான் !
வாலிப பருவத்தில்
கன்னி மனதில் இடம் தேடினான் !

தந்தையானதும் பிள்ளைக்கு
பள்ளியில் இடம் தேடினான் !
வேலை ஓய்வுக்கு முன்பு
தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடினான் !

இறுதிவரை முதியோர் இல்லத்தில் இருக்கும்
அவன் பெற்றோரைத் தேடவில்லை !
ஆனால்,
அவன் இறுதி மூச்சு பிரிந்தது
முதியோர் இல்லத்தில் தான் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 11வது கவிதை

Thursday, August 28, 2008

ஆத்திகன் நாத்திகம் பேசுகிறான்

கோவை குண்டு வெடிப்பின் போது
வராத மருதமலை முருகர் !
பாதிரியார் எரிக்கும் போது
வராத சிலுவை ஏசுநாதர் !
பாபர் மசூதி இடிக்கும் போது
வராத உருவமில்லாத அல்லா !
குஜராத் மதக்கலவரத்தில் உதவாத
இன்னும் சில கடவுள்கள் !
மனிதர்களின் மரணத்தின் போது
வராத கடவுள்
தனி ஒரு மனிதனின் வேண்டுதலுக்கு
வந்து விடவாப் போகிறார் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகிறேன் !

மசூதிக்குச் செல்பவனும்
விபூதி பூசுபவனும்
பண்ணீர் ஏந்தி நிற்பவனும்
மனித நேய மனதை
மத வெறியில் எரிக்கின்றான் !

கீதை நாயகனோ !
கண்கள் மூடிக் கொண்டான்
கூரானின் நாயகனோ !
கடமை மறந்தான்
பைபிளின் நாயகனோ !
பார்த்துக் கொண்டு இருக்கிறான்
இறுதியில்
தீவிரவாதிகளிடம் இருந்து
தன் கோயிலைக்
காப்பாற்றத் தவறினான் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகின்றேன் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 40வது கவிதை

Monday, August 25, 2008

எய்ட்ஸ் குழந்தை

என்றோ விடலை பருவத்தில்
தந்தை தவறு செய்தான் !
ஒன்றும் அறியாத தாயோ
அந்த தவறுக்கு இணங்கினாள் !
உடல் எடை கூடும் முன்
எய்ட்ஸ் நோயுடன் பிறந்து விட்டாய் !!

மொழிகள் வார்த்தை அறியும் முன்
எய்ட்ஸ் நோயால் புறக்கணிக்கப்பட்டாய் !
பால் குடிக்கும் பருவத்தில்
பால்விணை நோயால் அவதிப்பட்டாய் !
மண்ணில் வாழ்த் தொடங்கும் முன்
மரணத்தின் வாசல் தட்டத் தொடங்கிவிட்டாய் !!

அர்த்தமற்ற பிறப்பில்
முடிவைத் தேடி செல்கிறாய் !
ஓடி விளையாட முயலும் முன்
வாழ்வின் நாட்களை எண்ணுகிறாய் !

பெற்றோரின் பாவம் பிள்ளைக்கு
என்று இறைவன் வகுத்த நீதியாம் !
"தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க
அவர்கள் பிள்ளைகளுக்கும் அதே தண்டனை"
பால்வினை நோயின் நீதியாம் !

சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது
எய்ட்ஸ் நோயின் முடிவு மரணம் என்று !
எங்கோ கேட்டேன்
மனிதனின் முடிவும் மரணம் என்று !
யாரும் கூறவில்லை
மண்ணில் பிறந்தவுடன்
மனிதர்களால் மரண தேதி
குறிக்கப்பட்டவர்கள் 'இவர்கள்' என்று .....!!

- நான் எழுதிய் "உறங்காத உணர்வுகள்" நூலில் 17வது கவிதை

Thursday, August 21, 2008

கவிதையின் எதிரி

‘கவிதை’
என்பது பொய்யாம்
ஆதலால், கவிதைக்கு
உண்மை தான் எதிரி !

பொய்யெல்லாம்
உண்மையாகிவிட்டால் !
எழுதிய மையெல்லாம்
உண்மையாகிவிடும் !

காற்றோடு செல்லும் உடல்
கவிதை பாடும் குயில் !
மதுவின் மயக்கம்
மாதுவின் ஸ்பரிசம் !!

மரணத்தின் நடுக்கம்
மரணப்படுக்கை உறக்கம் !
பள்ளியில் வந்த முதல் சினேகிதம்
கல்லூரிக் காதல் கொடுத்த இன்பம் !!

முதல் முத்தம்.....
முல்லை தரும் சுகந்தம் !
தோழியுடன் நடைப்பயணம்
தோழர்களுடன் பேரூந்துப் பயணம் !!

மூன்றாம் பிறையாக
சித்தரிக்க படும் சூரியன் !
முத்திரை பொழுதில்
முழு நிலவாய் சந்திரன் !!

அழிகில்லாப் பதுமையை
அவதாரம் என்று அழைப்பது !
அவளின் கோழிக் கிறுக்கல்களை
கவிதை என்று வர்ணிப்பது !!

மரணத்தின் பின் வாழ வைப்பது
பிறக்கும் முன்பே உருவத்தை வடிவமைப்பது !

எல்லாம் சாத்தியம் கவிதையில்...
ஆனால்,
இந்த உண்மை
எட்டவில்லை சில பேர் மனதில் !

கற்பனைகள்
கவிதைக்குத் தீனிப்போடும் !
ஏதார்தங்கள்
எதிர்மறையாக சண்டைப்போடும் !

உண்மை கவிதைக்கு
தடை விதிக்கவில்லை !
உண்மையை உணர்ந்தவர்கள்
கவிதைப் பொய் என்றே கூறுகிறார்கள் !

கனவுகளே கவிதைக்கு விதையானது
கற்பனையே கவிதையின் எழுத்தானது !
விற்பனை ஆகும் போது காசானது
உண்மையே கவிதைக்கு எதிரியானது !!

Monday, August 18, 2008

அயல்நாட்டு மணவாளன்

இந்தியாவில் நதிகளுக்கு
கங்கை, யமுனை என
பெண்ணை புனிதப் படுத்தினான் !

அமெரிக்காவில் புயலுக்கு
கத்திரீனா, ரீடா
என்று பெண்ணின் பெயரை வைத்தான் !

பச்சை அட்டை வாங்கிய
அமெரிக்கா குடிப்போன
இந்திய குடிமகனை தேடுகிறாய் !
பச்சை வியர்வை சிந்தும்
பச்சை தமிழனை
மணவாளனாக ஏற்க மறுக்கின்றாய் !

நவ நாகரிகத்தை
உடையில் காட்டியவளே !
நவ நாகரிக நாட்டுக்கு
குடித்தனம் நடத்த நினைப்பவளே !
அன்னையின் அன்பை
அயல் நாட்டு மோகத்தில் மறந்தாய் !
பிறந்த வீடு , புகுந்த வீடு இரண்டும் இல்லாமல்
வேறு தேசம் குடி புகுந்தாய் !
வருடத்திற்கு ஒரு முறை
உன் பிள்ளைகளை
‘பேரன்’, ‘பேத்தி’ என்று சொல்லி
பெற்றோரிடம் காட்ட நினைக்கின்றாய் !

யாரும் ஆணையிடமாலே
உன் மணவாளனுடன்
உன்னை நீயே
நாடு கடத்திக் கொண்டாய் !

தேசம் தாண்டும் தமிழச்சியே
இறுதியாக ஒரு வேண்டுக் கொள்..!

தேசம் துறந்து சென்றவனுக்கு
உன்னை துறந்து செல்லாமல்
பார்த்துக் கொள் !!

'வசந்த வாசல் 2008 கவிதை தொகுப்பு' நூலில் நான் எழுதிய கவிதை.

Thursday, August 07, 2008

இப்படிக்கு காதல்...

அன்புள்ள இறைவனுக்கு,
உன்னால் படைக்கப்பட்ட காதல் எழுவது,
நான் இறக்கும் தருவாயில்
என் உயிரைக் காக்க விண்ணப்பக் கடிதம் !

அன்று -
தாஜ்மஹால் கட்டும் அளவிற்கு
காதல் புனித மானது !
இன்று -
மூன்று பெண்களைக் காதலிக்கும்
அளவிற்கு காதல் மொழுது போக்கானது !

அன்று -
காதலுக்காக உயிரையே கொடுத்தார்கள்
இன்று -
காதலியின் வயிற்றில் உயிரைக் கொடுக்கிறார்கள்.

அன்று -
மணந்தால் மகாதேவி
இல்லை என்றால் மரண தேவி !
இன்று -
கிடைத்தால் பத்மினி
இல்லை என்றால் ரோகினி !

அன்று - காதல் தெய்வீகமானது !
இன்று - காதல் சுயநலமானது !

இறைவா !
என் பெருமையை உணர்ந்த
அம்பிகாபதி அமரவாதியைப் படைத்துவிடு !
ஷாஜகானுக்கு உயிர் கொடுத்து
இன்னொரு தாஜ்மஹால் கட்ட உத்தரவிடு !
லைலா, மஜ்னுக்கு உயிர் கொடுத்து
காதலின் பெருமையை உணர்த்திவிடு !

காதலை புனிதப்படுத்தும்
ஷேக்ஸ்பியர் போன்ற எழுத்தாளர்களை
தரணியில் வாழவிடு !

இவர்கள் இறந்து என்னை பெருமை படுத்தினர் !
பலர் வாழ்ந்து என்னை காயம் படுத்துகிறார்கள் !

இன்னும் சில காதலர்களை கொடுத்து
என் சரித்திரப்பக்கங்கள் நிரப்ப வேண்டும்
இந்த நூற்றாண்டில்
நான் புனிதமாய் நடைபோட வேண்டும் !

- இப்படிக்கு,
காதல்.


- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து 24வது கவிதை (2003)

Friday, July 25, 2008

காதல் மௌனம்

உன்னை மகிழ்விக்க
நான் நடனம் கற்றுக் கொண்டேன் !
உன் அழகை வர்ணிக்க
கவிதை எழுத கற்றுக் கொண்டேன் !

உன் அழகை வரைய
நான் ஒவியம் கற்றுக் கொண்டேன் !
உன் துன்பத்திற்கு ஆறுதலாக
நான் பாடக் கற்றுக் கொண்டேன் !

உன் கை வலிக்கும் என்று
நான் சமைக்கக் கற்றுக் கொண்டேன் !
ஆனால் உன்னிடம் காதல் சொல்ல
நான் எப்படி கற்றுக் கொள்ளப் போகிறேன் ?

நான்கு மொழிகள் கற்று அறிந்தவன் நான்
எந்த மொழிகளும் உதவவில்லை
உன்னிடத்தில் என் காதலை சொல்ல....

ஒவ்வொரு மொழிகளிலும் வார்த்தைகள் தேடுவதால்
என் மௌனம் மொழியாக மாறாவில்லை !

கணிப்பொறி வினாவுக்கு
விடை அளிப்பவன் நான்
என் காதலின் வினாவுக்கு
உன் விடை கேட்க உதடுகள் அஞ்சுகின்றன !

பார்த்தவுடம் காதல் சொல்லி
வாழ்ந்தவர்கள் மத்தியில்
கனவில் உன்னுடன் வாழ்ந்தும்
காதலை சொல்ல மன வரவில்லை !

கணிப்பொறியில் காதல் செய்யும் காலத்தில்
இன்னும் கவிதையில் காதல் செய்கிறேன்
இன்னும் என் மொழிக்கு வார்த்தைகள் கிடைக்காததால்...!

Friday, July 18, 2008

மகாத்மாவுக்காக அழுகின்றேன்

நூறு வயது கடந்த
மகாத்மா உன்னை அழைக்கிறேன்
என் சோகத்தை உன்னிடம் கூற...!

வெள்ளையரை விரட்டிய
நூறு வயது இளைஞனே !
உன் மண்ணில் பிறந்த இளைஞர்கள்
மத வெறி மிருகங்களாக மாறிவிட்டார்கள்
அவர்களுக்காக நான் அழுகின்றேன் !

அன்று !
ஆப்பிரிக்கா இரயில் பெட்டியில்
வெளியே தள்ளப்பட்ட இளைஞன்
துடித்து எழுந்தான்
புரட்சி பிறந்தது !

இன்று !
மதத்திற்காக
ஒர் இளைஞன் துடித்து எழுந்தான்
குஜராத்தில்
புதிய ( இரத்த) ஆறு பிறந்தது !

மகாத்மா !
உனக்காக நான் அழுகின்றேன் !
நீ சிந்திய இரத்ததில்
சுதந்திரம் கண்டோம் !
பலர் இரத்தம் சிந்திக் கொடுத்த
குஜராத் பூகம்ப நிவாரணநிதி
குஜராத் மதக்கலவரத்தால்
மீண்டும் இரத்தமாக மாறிவிட்டது !
அங்கு சிந்தும் இரத்த வாடை
தமிழகத்தில் வீசுகிறது !
மீண்டும் உன் மண்ணில் பிறந்து
உன் மக்களிடம் இருந்து
உன் மண்ணைக் காப்பாற்று !

மகாத்மா அழுதார்
மீண்டும் அந்த மண்ணில் பிறப்பதற்கு !
மகாத்மா தன் சோகத்தை முறையிட
அயோத்தி ராமனிடம் சென்றார்
அவரிடம் கூற மறந்து விட்டேன்
இன்று டிசம்பர் ஆறு என்று !
அயோத்தி ராமனோ !
தலைமறைவாகி விட்டான் !
அங்கு பார்த்த கலவரத்தில்
மகாத்மா மீண்டும்
விண்ணுலகம் பறந்தார் !
இறுதியாக அவர் கூறிய வார்த்தை
" ஹே ! ராம்
உனக்குக் கூட என் நிலைதானா ! "

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் இருந்து முதல் கவிதை (2003)

Thursday, July 17, 2008

முடிவடையாத கவிதை (கலவரம்)

டிசம்பர் ஆறு அன்று
தொலைந்த போன
அல்லா ! ராமா !
அயோத்தி மக்களைக் காப்பாற்ற
உங்கள் இடத்தை நிரப்ப
வேறொரு இறைவனைத் தேடுகிறேன் !

முதலில் ஏசுவை அழைத்தேன்
"சிலுவையில் அறைந்து
நான் பட்ட துன்பம் போதும் " - என்றார் !

புத்தரை அழைத்தேன்
மூடிய கண்களை திறக்காமல்
மௌனம் சாதித்தார் !

பிள்ளையாரை அழைத்தேன்
"தன் மூஞ்சுறுக்கு
நூறு பூனைப்படை காவலுக்கு" கேட்டார் !

முருகனை அழைத்தேன்
" தனக்கு ஆறுபடை வீடு போதும்" என்றார் !

சிவனை அழைத்தேன்
"தன் அழிக்கும் தொழிலை
தனக்கு பதிலாக மனிதர்கள் தொடர்கிறார்கள்" - என்றார் !

இறைவனிடம் உரையாடும் போது
குஜராத்தில் மீண்டும் கலவரமாம்
அங்கு எந்த இறைவனை அழைப்பது ?

அயோத்தி இடத்தை நிரப்பும் முயற்சியில்
என் கவிதையின் பக்கங்கள் மட்டுமே நிரம்பியது !
கலவரங்கள் முடியும் வரை
இந்த முடிவடையாத கவிதையின்
பக்கங்கள் நிரப்பப்படும் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 16வது கவிதை.

Tuesday, July 08, 2008

என் உயிர் தோழிக்கு...

கோயிலுக்குச் செல்லும் போது
என் காலணியை மட்டும் அல்ல......
என் தீய எண்ணங்களையும்
வெளியே விட்டே செல்கிறேன் !

உன்னிடம் பேசும் போது
காதலை மட்டுமல்ல......
காமத்தையும் மறந்தே
உன்னிடம் பேசுகிறேன் !

கோயிலுக்குள் தீய
எண்ணங்களுக்கு இடமில்லை !
ஆண் பெண் நட்புக்குள்
காமம் வருவதில்லை...!!

பேருந்து நிலைவரை
நம் நடைப் பயணத்தில்
"கடலை" என்று கூறும்
தூரத்து நண்பர்களின்
கேலிப் பேச்சுக்களும்.......

நம் நட்பை “காதல்” என்று
அரிதாரம் பூசும்
நம் வகுப்பு நண்பர்ளும்...

இவர்கள் பேச்சில்
மனமுடையும் போது
“அவர்கள் பேச்சை விட்டு தள்ளுடா” -
என்ற உன் வார்த்தைகளும்.

புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தேன்.......
என் சக வயதில்
இன்னோரு அன்னையை !

நீ எனக்கு பெண்ணல்ல
என் ஆண் நண்பர்களில் ஒருவன் !
நான் உனக்கு ஆண்ணல்ல
உன் பெண் தோழிகளின் ஒருத்தி !

ஒளவை அதியமான் நட்பு
ஆண் பெண் நட்பு உதாரணமா...!
நம் நட்புமட்டும்
இவர்களுக்கு ஏளனமா... !!

அன்றைய நட்பை
நாம் உதாரணம் காட்டினோம் !
நம் நட்புபை
நாளையத் தலைமுறை
உதாரணம் காட்டட்டும் !!

நினைவில் நின்ற நண்பர்களுக்கு...

(என் கையெழுத்து (ஆட்டோகிராப்) புத்தகத்தில் முன் பக்க கவிதை)

நாம் எதிர்பார்க்கவில்லை
சந்திப்போம் என்று !
நாம் எதிர்பார்க்கிறோம்
பிரியப்போகிறோம் என்று !
நான் எதிர்பார்க்கிறேன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று !

தலைமுடி நரைத்தப் பிறகு
தலைமுறை ஒன்று கடந்த பிறகு
என்றோ ஒரு நாள் சந்தித்தால்...

நன்றாய் பழகினோம் என்று
நாம் பேசிய வார்த்தைகள்
நினைவில் இருந்தால்...
அன்று கூறுவோம் நம் நட்பு கடல் என்று

நம் நினைவுகளை
நெஞ்சில் பதித்துவிட்டேன்
என் கையெப்பப் புத்தகத்தில்
கையெழுத்து இடுங்கள் !

எங்கள் முகங்களை
நினைவில் நிருத்திக் கொண்டேன்
இருப்பினும் உங்கள்
புகைப்படங்கள் தாருங்கள் !

காலம் நினைத்தால்
மீண்டும் சந்திப்போம்
சரித்திரம் படைத்தவர்களாக !
நீங்கள் சரித்திரம் படைக்க
என் வாழ்த்துக்கள் !!

Wednesday, June 25, 2008

கணிப்போறி வாழ்க்கை

அதிகாலை வேளை..............
ஞாயிறு நண்பன் மறைய
திங்கள் எதிரி உதிக்க
என் பயணத்தை தொடங்கி விட்டேன்
புதிய யுத்ததிற்கு......

10 மணிக்கு தொடங்கும் வேலைக்கு
9 மணிக்கே சென்றேன்
வேலை செய்வதற்காக அல்ல
நண்பர்களின்
Forward Mail படிப்பதற்காக
இதோ தொடங்கி விட்டேன்….
Bug-Fix வேட்டையை….
Back-End, Front-End என்று அலைய
அதற்கு முன் VSS ல் Checkout செய்ய
Bug-Fix சரி பார்த்து Check-in செய்ய ....!
Bug-Fix சரி பார்க்கும் நேரத்தை விட
அதற்கான விதிமுறைகளே அதிகம் !!

வேலை முடிந்தது என்று நினைத்தேன் !
இல்லை என்று கூறிய படியாக...
Project Leader சிரித்தார் !
அடுத்த வேலைக்கு
ஆயத்தம் ஆனேன் !!

உணவு இடைவேளையிலும்
வேலை பற்றி சிந்தனை !
நித்திரை கெடுக்கும்
அயராத சோதனை !!

வெள்ளி வந்ததும்
மனிதனாக மாறலாம் என்று நினைத்தேன் !
புன்னகையுடன் சனிக்கிழமை
Project manager கூறினார் !
மனதில் வெடித்து கொண்டு
நானும் சம்மதித்தேன் !!

மனதில் வெடித்து கொண்டு இருக்கையில்
E-mail ல் ஒரு நண்பன்....
என் அலுவலகத்தில் வேலை
உள்ளதா என்று கேட்டான் !
நான் இயந்திரமாக மாறிவிட்டதை
நினைத்து வருந்துகிறேன் !
அவன் இயந்திரமாக
மாற துடிக்கின்றான் !!

Friday, June 06, 2008

நட்பு துளிகள்

நாம் 'காதலர்கள்' என்று
உன் தோழிகள் கேலி செய்வதாக
வருத்ததுடன் சொல்கிறாய்.. !
நான் கொடுத்து வைத்தவன்
நம்மை 'நண்பர்களாக'
பார்க்கும் கண்களை தான்
நான் நண்பர்களாக பெற்றேன் !!

********

காதலில் தாய்மை கிடைத்தால் - அதிஷ்டம்
நட்பில் கடவுளை கண்டால் - பேரதிஷ்டம்..!!

********

குடிதுவிட்டு வந்த என் நண்பன்
உன் தோழியிடம் பேசும் போது
உதை வாங்கினான்
காரணம் - காதல் !
நான் குடித்துவிட்டு
உன்னிடம் பேசினேன்
'குடிக்காதே' என்று
அறிவுரை கூறினாய்
காரணம் - நட்பு !!

**********

Thursday, April 17, 2008

கணினி தேவதை

தந்தையின் கட்டாயத்திற்காக தான் கணினி கற்கும் இடத்திற்கு வந்தேன். கணினி வகுப்பு வரும் போது மனதில் எத்தனை முறை வெடித்துக் கொண்டேன் தெரியுமா..... தேவதை நீ அங்கு வந்து சேர்ந்த பிறகு தான் நான் அங்கு சேர்ந்ததற்கு அர்த்தம் பிறந்தது.

கணினி கற்க வந்த எனக்கு கன்னி மனதை கற்க ஆவல் வந்தது. கன்னி மனதை படிப்பதற்கு உலகத்திலே இதற்கு மட்டும் தான் எந்த கல்லூரிகளும் இல்லை, பல்கலைக்கழகங்களும் இல்லை. அவரவர் சொந்த முயற்சியில் கற்கிறார்கள். எந்த தேர்வில் தோல்வி அடைந்தாலும் வருந்தாத இளைஞர் படைகள் இதற்கு மட்டும் வருந்தும்.

ஐய்யோ...தோல்வியா ... இதில் மட்டும் தோல்வியை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. எதிலும் தோற்றாலும் அடுத்த முயற்சியில் வென்று விடலாம் என்று மனதை தேற்றிக் கொள்ளலாம்..... காதலில் அடுத்த முயற்சி என்பது வெறோரு பெண்ணாகத் தான் இருக்கும்.... அவளை மறந்து வேறொரு பெண்ணா...? அப்படி நினைத்து கூட பார்க்க முடியவில்லை....

பெண்ணை காதலித்து தோல்வி அடைந்தால் காதலிக்க வேறொரு பெண்ணை தேடலாம். தேவதை காதலித்து தோற்றவன் வேறோரு தேவதையை எங்கு போய் தேடுவது. கிளியோபட்ரா அழகில் கூட மூக்கு நீளம் என்ற குறை உண்டு. உன் அழகில் நிறைகள் மட்டுமே உள்ளன. எனக்கு தெரிந்து இந்த மண்ணில் இருப்பது ஒரு தேவதை .... அதுவும் அவள் மட்டும் தான்.... இதில் தோல்வியே இருக்க கூடாது... தோற்றாலும் என் மரணத்திலே தான் முடிய வேண்டும்.
நீ தீண்டுவதற்கு அந்த Keyboard என்ன தவம் செய்ததோ.... உன் விரல் நுணி படுவதற்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்துக் கூட தமிழ் கற்குமடி.... உன்னிடம் பேசுவதற்காக... தமிழை வளர்க்க சங்கங்கள் தேவையில்லை. உன்னை போல் தேவதை போதும் தமிழ் வளர்ந்து விடும். உன்னால் எல்லோரும் கவிஞர்கள் ஆகிவிடுவார்கள்..... உலகம் முழக்க தமிழ் பறப்புவதற்கு உன்னை போன்ற தேவதைகளே மண்ணில் பிறக்க வேண்டும்.

வீட்டில் எலி என்றால் அஞ்சுவாய் என்று சொன்னாவளே.... ஆனால் கணினிப்பொறி முன் எலியைத் (Mouse) தான் பிடித்துக் கொண்டு இருக்கிறாய். உன்னை பயமுட்டிய எலி, பல்லி, பூச்சிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும்.... உன்னை பய முட்டியதற்காக ! அவைகள் எல்லாம் உன்னை தரிசிக்க வந்தது என்று உனக்கு புரியவில்லையா... எலி, பூச்சிகளுக்கு வாயில்லை உண்மையை சொல்வதற்கு.... அதற்கு வாய் இருந்தால் அது கூட உன்னை பற்றி கவிதை பாடும்...
இந்த கணினி கூட ஐந்து நிமிடத்தில் பதில் அளிக்கும். ஆனால் நீ ஒவ்வொரு வார்த்தைக்கும் இடைவேளை விடுவது தான் என்னை பாதிக்கும். Sherlock நாவலில் கூட அடுத்தது என்ன நடக்கும் என்று கனித்து விடலாம். நீ அடுத்தது என்ன பேசுவாய் என்று கனிப்பதே மிகவும் கடினம். கணினி இயங்கும் வேகம் தெரியும். ஆனால், உன் இதயம் இயங்கும் வேகத்தை அறிய கணினிக் கூட தோற்கும்.

உன் அறிமுகம் கிடைத்தற்கே இத்தனை மகிழ்ச்சி என்றால்..... நீ எனக்கு கிடைத்தால்... உலகில் இருக்கும் அத்தனை ஆண்களின் பொறாமைக்கும் நான் தான் சொந்தக்காரனாக இருப்பேன். நீ எனக்கு கிடைத்த பிறகு மற்றவர் பொறாமை என்னை என்ன செய்யும்.

மானிடனாய் பிறத்தல் அறிது என்ற வாக்கியம் உண்மை என்று இன்று தான் புரிந்துக் கொண்டேன். இந்த பல்லி, எலிகளுக்கு இல்லாத பாக்கியம் எனக்கு கிடைத்தே.....!
பெண்ணைப்பார்த்தால் காதல் கவிதை தான் வரும்.... தேவதை உன்னை பார்த்தால் காதல் காவியமே வரும். உன்னை பார்த்த இக்கணம் தோன்றிய கவிதை இது...

246 தமிழ் எழுத்துக்கள் வாடுது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...

கவிதை எழுத கற்று தந்த உன் அழகு.... கொடுக்க தைரியத்திற்கும் தடைப் போட்டது. தடைகள் எல்லாம் தகர்க்கும் வரை உன்னை வர்ணிக்கும் என் கவிப்பணி தொடரும்.....

Tuesday, April 08, 2008

இயற்கை தேவதை

இயற்கைக்கு பிறகு பச்சை நிற ஆடையில் நீ மட்டும் தான் தேவதையாய் தெரிந்தாய். இயற்கைக்கு சற்று போட்டியாய் உன்னை படைத்து விட்டானோ இறைவன் என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு பச்சை நிற ஆடையில் இன்னொரு இயற்கை அன்னையாய் தெரிந்தாய் நீ.....

"எனக்கு இன்னைக்கு பிறந்த நாள் !" என்று நீ சொல்லி இனிப்பை நீட்டினாய்.

நானும் பல முறை சுவைத்துப் பார்த்தேன். எனக்கு மட்டும் இந்த இனிப்பு தெவிட்டவில்லை. காரணம் உன்னிடம் கேட்டதற்கு "நீ சுவைத்தது இனிப்பை யல்ல...என் இதழ்கள்" என்றாய்.
இந்த இனிப்பை எந்த கடையிலும் விற்பதில்லை. ஒரு விதத்தில் நல்லது தான். இந்த இனிப்பு நான் மட்டும் சொந்தக்காரன் என்ற கர்வம் வந்தது.

"முத்தம் கொடுத்தது போதும்... நான் கொண்டு வந்த இனிப்பையும் சுவைத்த பார் !" என்றாய்.

உன் இதழ்களை விட்டு உன் கன்னத்தை சுவைக்க தொடங்கியது என் இதழ்கள். எத்தனை முறை முத்தம் கொடுப்பாய் உனக்கு அலுப்பு தட்ட வில்லையா என்று போய்யான கோபத்தில் கேட்டாய். எத்தனை முறை அலைகள் கரைக்கு வந்து கொண்டு இருக்கிறது. என்றாவது கரை அலைகளை பார்த்து இப்படி கேட்டுயிருக்குமா ?

"உனக்கு முத்தம் கொடுத்து அலுப்பு தட்டவில்லை..... உன்னிடம் ஒரு முறை எல்லை மிரலாமா என்று மனது துடிக்கிறது" என்றேன்.
"அடபாவி...கன்னத்தில் அரை வாங்குவாய்" என்றாய். அறையில் பள்ளிக் கொள்ள வா என்று அழைத்ததற்கு அடி விழும் என்றாய். அ து கூட எனக்கு சுகம் தானடி நீ என்னை தீண்டுவதால்......

"உன் பிறந்த நாளுக்கு ஒரு கவிதை சொல்லட்டுமா." என்றேன்.

"சரி....சொல்" என்றாய் வெட்கத்துடன்.

உன் பிறந்த நாள்
ஒன்றை தவிர
மற்ற 364 நாட்களும் ஏங்குதடி
வேறு எந்த தேவதையும்
மண்ணில் பிறக்காததால்.....

ஆசையில் கட்டியனைத்து முத்தம் கொடுத்தாய்.... இவ்வளவு நேரம் நான் உனக்கு கொடுத்த முத்தங்களை எல்லாம் தொற்கடித்தது போல் உன் முத்தம்.... என் கன்னத்தில் விழுந்தது. பொறாமையில் மற்ற அங்கங்கள் வாடியது......!

நான் கொடுத்த நூறு முத்தங்களும் உன் ஒரு முத்தத்தில் தோல்வியை தழுவியது. நல்ல வேலை வெட்கம் பெண்களுக்கு ஆடையாகாவிட்டால் என்னை பொன்ற ஆண்களின் நிலைமை என்னவாகும்.

நீ வெட்கத்தில் கொடுத்த ஒரு முத்தத்திற்கே இவ்வளவு சக்தி என்றால்..... நீ உன் வெட்கத்தின் எல்லையை மீறினால் நான் என்ன ஆவேன்.... பயம் களந்த ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறேன்..... நாம் எல்லை மீறும் மண நாள் என்று வருமோ.....?

Tuesday, April 01, 2008

உணவு

கையில் சுலாயுதமாய் ஃபோர்க்
விரல்கள் நடுவில் ஸ்புன்
நேடு நேரம் கழித்து செரிக்கும் உணவு
கை கழுவ ஃப்பிங்கர் ப்பௌல் !!

இங்கே உணவின் வகைகள் நிறைவு
கொடுக்கும் அளவோ குறைவு !
பசி அடங்கியதோ கடுகளவு
வரும் பில்லோ வானளவு !!

அன்ன தானம்
தனத்திடம் மட்டும் குடியிருக்கிறாள் !
அன்னபூரணி
புரனமாய் மாறிவிட்டாள் !!

அரோக்கியமான உணவு மலிவாய் இருக்க
வியாதிகளை உணவாய் உண்ண...

கலாச்சாரத்தை மறந்த மனிதன்
உணவுக்கு கலாச்சாரம் வளர்க்கின்றான் !!

வாக்காளர் பட்டியல்

சிட்டிசன் கதையும்
எங்கள் கதையே...
வாக்காளர் பட்டியலில்
எங்கள் தெருப் பெயரே காணவில்லை

நூறு சதவீதம் ஒட்டு பதிவு
சட்டசபையில் மட்டுமே சாத்தியம் !

சட்டசபை தேர்தல் தேர்தலில்
ஒரு நாள் விடுமுறை மட்டுமே லாபம் !

இறந்தவர்கள் உயிர் பெற்ற
பல கதைலள் உண்டு

உயிர் இருந்தும் இறந்தார்
என அறிவிக்கப்பட்டவர் உண்டு !!

பல முறை தேர்வு எழுதியும்
பாஸ் ஆகாத மாணவர்கள்
- மக்கள்

படிக்காமலே பாஸாகும் மாணவன்
- வேட்பாளர்

புதிய தேகம் வேண்டும்

என் தேகம் அமைப்பை மாற்ற
தெய்வத்திடம் முறையிட்டேன்
அவனோ முறைத்தவாரே !
செவிக் கொடுத்தான்
என் குரலுக்கு.......

என் உடலில்
தேவையற்ற பாகங்கள் இரண்டு
தேவையான பாகங்கள் ஒன்று !

தேவையற்ற பாகங்கள் என்ன ? -
என்றான்
விடையளித்தேன்

ஒரு காட்சியை
காண இரு கண்கள் !
ஒரு ஒலியை
கேட்கும் இரு செவிகள் !
ஒரு வாடையை
ஸ்வாசிக்க் இரு கூலாய்கள் !
தேவையற்ற வெளியேற்றும்
இரு சிறுநீர்கள் !
இதில் ஒன்றை நீக்கிவிட்டு
நான் கேட்கும் பாகங்கள்
இரண்டை கொடு !

செரிக்க ஒரு வயிறு
செமிக்க மற்றொரு வயிறு !
ஒரு தேகத்தில்
இரண்டு இதயங்கள்
உண்மை மட்டும் பேசும்
இன்னொரு இதழ்கள்
வாகெடுக்கும் தலைக்குள்
இரண்டு அறிவு
என் உரையை முடிப்பதற்குள்
இறைவன் மறைந்தான் !

நான் கூறிய தேவையற்ற பாகங்கள்
பிரம்மனுக்கு நான்கு மடங்கு அதிகம் !
அழிக்கும் தொழில் கொண்ட புதல்வன்
வேலனுக்கு ஆறு மடங்கு அதிகம் !

தன் தேகத்தையே !
சரியாக படைக்க தெரியாதவன்
தன் தவறை மறைக்க மறைந்து விட்டான் !

Monday, March 24, 2008

தேவதை தோழி

நான் கல்லூக்கு வருவதே உனக்காகத் தான் என்று யாருக்கும் தெரியாது. நான் உன்னை மற்ற பெண்களை போல் நினைத்ததில்லை. நம் வகுப்பில் இருக்கும் மற்ற பெண்களும் நீயும் ஒன்று என்று யாரும் சொல்லமுடியாது. நான் நம் வகுப்பில் இருக்கும் எல்லா பெண்களிடம் பேசியிருக்கிறேன்.... உன்னிடம் தவிர. காரணம், என் மீது எனக்கே நம்பிக்கை இல்லை. உன்னை பார்த்தா பிறகு உனக்காகவே வகுப்புக்கு வருகிறேன். உன்னிடம் பேச தொடங்கினால்...... என் வார்த்தைகள் உனக்காக மட்டும் தான் உயிர் வாழும்.

உனக்கு சொந்தமான வார்த்தைகளை எப்படி நான் எப்படி மற்றவர்களிடம் பேச முடியும். அப்படி பேச தொடங்கிவிட்டால் என் வார்த்தைகள் என்னோடு சண்டை போடாதா... தேவதை உனக்காக வாழ்ந்த வார்த்தைகள் மற்றவருக்கு பயன்பட்டால் யாருக்கு தான் கோபம் வராது.

நான் என் மீது நம்பிக்கை இல்லாததால் தான் உன்னிடம் பேசவில்லை. ஆனால், நீ என்னை சோதிப்பதற்காகவே என்னிடம் வந்து பேசுகிறாய். ஒவ்வொருவரும் உன்னிடம் பேச ஆசைப்படும் போது, நீயே என்னிடம் வந்து பேசினாய். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் எல்லாம் தடுமாறி போய்விட்டது. விலகிச் செல்லத்தான் நினைக்கிறேன். உன் வலையில் விழுந்து விட வேண்டும் என்றே என்னிடம் பேச சூல்லுரைத்தாய்.

நீ என்னிடம் பேசுவதால் எத்தனை ஆண்களுக்ளின் பொறாமை சம்பாதித்தேன் தெரியுமா ? உன்னிடம் என்ன பேசினேன் என்று எத்தனை ஆண்கள் உன் தோழிகளிடம் விசாரித்தார்கள் தெரியுமா ? நாம் காதலர்களா என்று ஒரு தனிப்படை குழு நம் விசாரித்துக் கொண்டு இருப்பது நமக்கே தெரியாமல் போனது.

என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னிடம் உன்னை பற்றி கேட்கும் போது.... நீ என் தோழி மட்டுமே தான் என்று என் வாய் சொன்னது.... மனமோ போய் ஏன் சொல்கிறாய் ? என்று கேட்டது....

என் காதலை முதலில் உன்னிடம் தானே சொல்ல வேண்டும்.... மற்றவர்களிடம் சொன்னால் என்ன பயன் ? மூன்று ஆண்டுகள் காதலை சொல்லாமல் கழித்துவிட்டேன். நாட்கள் செல்ல செல்ல உன்னிடம் உள்ள காதல் வளர்ந்துக் கொண்டே இருந்தது. ஆனால், தைரியம் குறைந்துக் கொண்டே வந்தது.

ஒருவன் என்னிடம் வந்து உன்னை காதலிப்பதாக சொல்லி , அதற்கு தூதாக என்னை செல்ல சொல்கிறான். அவனை அடிக்க துடித்தது கைகள், ஆனால் ‘நட்பு’ என்று சொல்லிய வார்த்தை ‘காதல்’ என்று மாற்றிவிடும் கூட்டங்கள் என்னை சூழ்ந்து இருந்தது. அவனுக்கு உதவி செய்ய மறுத்த வந்துவிட்டேன். அவனோ தன் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்துக் கொண்டே இருந்தான்.

ஒரு முறை என் காதலை சொல்ல வந்த நேரத்தில் , அவனும் உன்னிடம் காதலை சொன்னான். எவ்வளவு நாள் தான் நான் சொல்வேன் என்று நீ எனக்காக காத்துக் கொண்டு இருப்பாய். நீ அவன் காதலை ஏற்கும் காட்சியை கண்டேன். என் மௌனத்திற்கு தண்டனை உன் காதலை இழந்ததை என் கண்ணில் கண்டேன். தோல்வி ஒன்றும் எனக்கு புதிதல்ல..... இது தண்டனை, என் மௌனத்திற்கு கிடைத்த தண்டனை. நட்பை கலங்க படுத்த கூடாது என்று நினைத்தற்கு தண்டனையாக உன் காதலை இழந்தேன். அது தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

எண்ணிடம் பேச்சை குறைத்துக் கொண்டாய்.... அவனிடம் அதிகம் பேச தொடங்கிவிட்டாய்.... நானும் அதிகமாக பேசிக் கொண்டு இருக்கிறேன். உனக்காக நான் எழுதிய கவிதைகளுடன்.

சிக்னல் தேவதை

நில நிற மேகம் வாகனத்தில் என்னை கடந்து சென்றதை பார்த்தேன். ஆண்களை விட பெண்கள் வேகமான வாகனங்கள் ஓட்டுவார்கள் என்று உன்னை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உன் வலையல்களை கூட நீ இப்படித்தான் வளைப்பாயா என்று கேட்கும் அளவிற்கு உன் வாகனத்தை அப்படி வளைத்து செல்கிறாய். எனக்கு பழைய வண்டி வாங்கி தந்த தந்தையை திட்டிக் கொண்டு இருந்தேன். என்னால் உன்னை முந்தி உன் முகம் பார்க்க முடியவில்லை என்பதற்காக....

பெண்களை தொடர்வது இழுக்கு என்று சொன்னவன் நான்.... உன்னை தொடர்வதில் தவறில்லை... காரணம் நீ பெண்ணல்ல தேவதை. பலர் இங்கு காமத்திற்காகவே பெண்ணை பின் தொடர்ந்து செல்கிறார்கள். நான் தேவதை உன் தரிசனம் கிடைப்பதற்காக பின் தொடர்கின்றேன். உனக்காவே SCOOTY நிறுவனம் வடிவம் ஆமைத்தார்களோ என்ற சந்தேகம். அந்த வாகனம் உனக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அதன் வேகமும் அதிகமாகவே இருந்தது. நான் எங்கு செல்ல வேண்டும் என்ற இடத்தை கூட மறந்து விட்டேன். என் பின்னால் வா என்று உன் SCOOTY சொல்வது போல் உணர்வு. நான் நீ போகும் இடத்தை எல்லாம் தொடர்ந்தேன். ஆனால், நீண்ட நேரம்...... உன் பின் அழகை மட்டும் ரசிப்பது என்ற எண்ணம். உன் முகத்தை பார்க்க முடியாதா எனற் ஏக்கத்துடன் வேகமாக உன்னை தொடர்ந்தேன்.

நல்ல வேலை நம் ஊரில் ஒவ்வொரு சாலையிலும் நான்கு சிக்னல்கள் இருந்தன. பல முறை அவசரத்தில் செல்லும் போது இந்த சிக்னல்களை திட்டியிருப்பேன். ஆனால், இன்று தான் இந்த சிக்னல் நல்ல வேலை செய்ய தொடங்கியது. சிக்னலுக்காக நீ வண்டியை நிருத்த நானும் உன் அருகில் வண்டியை நிருத்தி பார்த்தேன்.... உன் முகத்தை. உன் அழகை என்ன வென்று சொல்வது. உன்னை வர்ணிக்க உயிருடன் இருக்கும் கவிஞர்கள் போதாது. இறந்த கவிஞர்களும் போதாது. இன்னும் கடவுள் பல கவிஞர்களை படைக்க வேண்டும்.....உன் அழகை பற்றி எழுதுவதற்காக....

என் மனதில் ஒரு குரல்.... அட மடையா... கவிஞர்களை உருவாக்கத் தான் கடவுள் இவளை படைத்தான்... உனக்கு புரியவில்லையா என்றது. அவளை பார்த்த சில நோடியில் நான் கூட கவிஞனாகிவிட்டேன் என்று அப்பொது தான் நானும் உணர்ந்தேன்.

நம் அரசாங்கம் ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் வைத்து இருக்கிறார்களே ..... பின்பு எதற்கு உன் நெற்றியிலும் இத்தனை சிக்னல். சற்று உற்று பாருடா என்று என் மனது சொன்னது.... அது சிக்னல் அல்ல அவள் நெற்றியில் இருக்கும் குங்குமம், சந்தனம், விபூதி.... என்று பார்த்தேன். சிக்னலின் ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் பிறந்தது அவளின் நெற்றியை பார்த்து தான் வந்தது போலும் என்று எனக்கு தோன்றியது.

அவள் அழகை ரசிக்கும் வேளையில்..... எதிரே விழுந்த பச்சை நிற சிக்னலை கவனிக்க மறந்தேன். பச்சை நிறம் விழுந்தவுடன் அவள் மின்னலாக பறந்தால்..... நானும் என்னால் முடிந்த வேகத்தில் பின் தொடர்ந்தேன். என்னை விட மிக தொலைவிலே சென்று விட்டாய். எப்படியாவது அவளை பிடித்தவிட வேண்டும் என்று என் வண்டிக் கூட வேகமாக ஓட தொடங்கியது. அடுத்த சிக்னல் வந்தது. அதில் பிடித்து விடலாம் என்ற கனவுடன் இருந்தேன். பாவி , சிக்னல் அவள் கடந்த பிறகு சிவப்பு விழுந்தது. மேலும் அவளை பின் தொடர முடியாமல் போனது. சற்று முன் தான் சிக்னலை பாராட்டினேன். அவள் நெற்றியில் இருக்கும் ஆன்மிக சின்னத்தை கூட சிக்னலுக்கு உவமையாக்கினேன். ஆனால், அந்த நன்றி மறந்த சிக்னல் என்னை ஏமாற்றி விட்டது. ஏமாற்றத்துடன் வந்த வழியே சென்றேன். மீண்டும் வழிக்காட்ட அந்த தேவதையில்லை. ஆனால், அவள் நெற்றியின் நினைவாக ஒவ்வொரு சாலையிலும் சிக்னல் இருக்கிறது.

Test tube தேவதை

வெள்ளை நிற தேவதை வெள்ளை நிற ஆடையில் Chemistry labs.... கையில் test tube ஏந்தி நின்று இரந்தாள்.

Test tube மூலம் குழந்தை பெறாலாம் கண்டு பிடித்தவன் கூட தன் ஆராய்ச்சி குறிப்புகளை அழித்துவிடுவான். காரணம், test tube ஏந்திய தேவதை அத்தனை அழகு.... Test tube குழந்தை கண்டு பிடித்த விஞ்ஞானி கூட அவனிடம் வாழ்ந்து குழந்தை பெற ஆசைப்படுவான். தன் தேசம் மறந்து இந்தியாவிலே தங்கி விடுவான். அ வ ளிடம் பேசுவதற்காகவே தமிழை கற்றுக் கொள்வான்.

வேறு தேசத்தவன் கூட அவளுக்காக தமிழ் கற்ற வேண்டும் என்று சொல்லும் போது ..... தமிழ் தெரிந்த நான் சும்மாவா இருக்க முடியும்.... என் தோழர்கள் படையுகளுடன், test tube ஏந்திய தேவதையிடம் சென்றேன்.

Chemistry lab முழுக்க திரவம் நாற்றம்..... அங்கு நுழைந்ததற்காக என்னை தூற்றிய நண்பர்கள்.... நான் மட்டும் அந்த தேவதை குரல் கேட்கும் ஆவலில் கால்கள் நடந்தது. நண்பர்களில் வார்த்தைகளை கேட்க காதுகள் மறுத்தது.....

அவள் இருக்கும் இடத்தை அடைந்தேன். அங்கு மட்டும் மல்லிகை வாசம் தூக்கி வாரிப்பொட்டது. அவள் கைப்பட்டதால் திரவம் கூட மல்லிகை வாசம் விசுதோ என்ற சந்தேகம். ஒவ்வொரு bottle லும் ஒவ்வொரு திரவங்கள்..... sulphuric acid, hydrolic acid. Sodium chloride என்று திரவங்களின் பெயர்களை சொல்லி எல்லோருக்கும் விளக்கிக் கொண்டு இருந்தாள். திரவங்களின் பெயர் எனக்கு எதற்கு..... அந்த தேவதை பெயர் தெரிந்துக் கொள்ள தானே காத்துக் கொண்டு இருக்கிறேன். இத்தனை பெயர்களை சொன்னவள் அவள் பெயரை சொல்லவில்லை.
நண்பர்கள் என்று எண்ணி என் எதிரிகளை தான் அழைத்து சென்று இருக்கிறேன். அந்த தேவதை ரசிக்க விடாமல் அந்த இடத்தை விட்டு செல்ல உத்தரவிட்டார்கள். நான் மறுத்தும் என்னை இழுத்து சென்றார்கள். மனதில் நண்பர்களை திட்டிக் கொண்டு அந்த தேவதை இருக்கும் இடத்தை விட்டு சென்றேன்.

மறு நாள் அதே கல்லூரி பொருட்காட்சி..... மீண்டும் அந்த தேவதை சந்திக்க என் முழு எண்ணமாக இருந்தது. உடன் எந்த நண்பர்களையும் அழைத்து செல்லவில்லை. அவள் இருக்கும் Chemistry lab க்கு மனம் விரைந்து ஓடியது. அந்த தேவதை இருந்த இடத்தில் வேறொரு கோதை நின்றுக் கொண்டு இருந்தாள். எத்தனை கோதை அங்கு நின்றாலும் அந்த தேவதை போல் வருமா..... திரவத்துக்கு கூட வாசம் தரும் அவள் ஸ்பரிசம் கிடைக்குமா ? .... என்று மனதில் ஏக்கங்கள் மட்டுமே நிறம்பியது. கண்களில் வெருமை தெரிந்தது.

Test tube குழந்தையை கண்டு பிடித்தவன். cloning முறையில் அவளின் இன்னொரு உருவை செய்தால் எப்படி இருக்கும் என்ற யோசனை வந்தது. வானத்தில் ஒரு நிலவுக்கு தான் மதிப்புண்டு.... செயற்கை கோளுக்கு என்ன மதிப்பு ... தகவல் தருவதை தவிர செயற்கைகோளால் என்ன பயன்....? நிலவு மட்டுமே எல்லோராலும் ரசிக்க முடியும். இந்த பூமி ரசிக்க அந்த ஒரு தேவதை போதும்..... அவளை cloning முறையில் இன்னொரு உருவை உருவாக்கினாலும் அது செயற்கை தனமாக தான் இருக்கும்.... நிலவு பூமி கண்ணுக்கு தெரியாமலா போகும்.... அந்த தேவதை என்றோ ஒரு நாள் மீண்டும் சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் அந்த தேவதை நடந்த சுவடுகளை தேடி மனம் போனப் போக்கில் செல்கின்றேன்.

Thursday, February 28, 2008

காதல் துளிகள் - 3

தேவதைகள் மாநாடு
என்று அறிவிப்பை கேட்டேன் !
எனக்கு சிரிப்பு தான் வந்தது
நீ மட்டும் தனியாக
அங்கு என்ன செய்ய போகிறாய்...?

********

கவிதை -
தபால்துறைக்கு அனுப்பப்படாத கடிதம் !
காதல் கவிதை -
எச்சில் தபால்தாள் ஒட்டப்படாமல்
வேறும் எச்சில் மட்டும் இருக்கும் கடிதம்

********

நீ என்னை
ஒவ்வொரு முறையும் கடக்கும் போதும்
என்னை தொலைக்கின்றேன்...
உன்னிடம்
கவிதை திருடுவதற்காக...

காதல் துளிகள் - 2

அவள் நெற்றியில்
இன்னொரு ட்ராபிக் சிக்னல்...
குங்குமம், சந்தனம், விபுதி...

******

246 தமிழ் எழுத்துக்கள் வாடியது....
'நீ' என்ற எழுத்து மட்டும்
புன்னகை சிந்தியது...
உன் பெயரை விட அதிகம்
உன்னிடம் உச்சரிப்பவர்கள்
அந்த எழுத்தை தானே ...!

*******

உன் பிறந்த நாள்
ஒன்றை தவிர
மற்ற 364 நாட்களும் ஏங்குதடி
வேறு எந்த தேவதையும்
மண்ணில் பிறக்காததால்.....

காதல் துளிகள் - 1

உன் தந்தை சோஸலிசம் பேசுகிறார்
கம்யூனிசம் நிறத்தில்
உன்னை வீட்டில் வைத்துக் கொண்டு!!

********

தமிழ் வாழ்க சொல்லும்
திராவிடன் நான் !
இந்தி வாழ்க சொல்கிறேன்
உந்தன் தாய்மொழி என்பதால்....!!

*********

உனக்கு தங்க நகை செய்ய
ஆசாரியிடம் பணம் கொடுத்தேன் !
தங்கம் சிரித்தது
தங்கத்திற்கே தங்க நகையா என்று....

Monday, February 25, 2008

காத்திருக்கிறோம்

இயற்கை நிலங்ளில்
இல்லங்களை கட்டிவிட்டு
மழைப் போழியுமா என்று காத்திருக்கிறோம் !

விவசாயம் செய்யும் இடங்களில்
வசியம் செய்யும் தொழிற்சாலைக் கட்டிவிட்டு
பசிக்கு உணவுக்காக காத்திருக்கிறோம் !

எத்தனையோ மதங்களை
இங்கு இறக்குமதி செய்துவிட்டு
இங்கு பிறந்த புத்தனை
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பிறகு
மீண்டும் ஒரு புத்தன்
பிறக்க மாட்டாரா என்று காத்திருக்கிறோம் !

மேடைகள் தோறும் போய்கள் உரைத்துவிட்டு
வாய்மை வெல்லும் என்று காத்திருக்கிறோம் !

அறிவை அமெரிக்காவிற்கு விற்று
அன்னையை இந்தியாவிற்கு கொடுத்து
அயல் தேச டாலருக்காக காத்திருக்கிறோம் !

கனவில் அரண்மனையில் வாழ்ந்துவிட்டு
நிஜத்தில் மழைக்கு ஒதுங்க
இடத்திற்காக காத்திருக்கிறோம் !

விழிகளை காமத்திற்கு கொடுத்துவிட்டு
இதயத்திற்கு காதலுக்காக காத்திருக்கிறோம் !

செவிகளை மூடிக்கொண்டு
நல்ல செய்திகளுக்காக காத்திருக்கிறோம் !

நம்பிய மனிதனை ஏமாற்றிவிட்டு
நன்றி உள்ளவனை பார்ப்பதற்காக காத்திருக்கிறோம் !

காத்திருப்பவர்களுக்கு எல்லாம் நிரைவேரும்
உலகில் எட்டாவது அதிசயம் நிகழ்ந்தால்........ !!

நீ தான் நாளைய நாயகன்

ஆங்கிலத்தில் மொழிக் கற்றா
சேர மன்னன் இமய மலையில் கொடியை பறக்கவிட்டான் !

தமிழ் மொழி கற்றா
வெள்ளையன் வந்து நம்மை ஆட்சி செய்தான் !

அலுவலத்தின் வேலையில்
ஆங்கிலம் மட்டும் பேசும் தமிழா
மீதி நேரம் கூட தமிழை
பேச தயங்குவது ஏனடா ?

நாசாவில் பணியாற்றும் இந்தியர்களின்
முப்பது சதவீதம் தமிழர்களடா !

கணிபொறி யுகத்தை மாற்றும் இந்தியர்களின்
முப்பத்தி ஏழு சதவீதம் தமிழர்களடா !

வெளி நாட்டவர்க்கும் தொழிலில்
அதிகம் இலாபம் கொடுத்தது தமிழ்மண்ணடா !

எங்கு சென்றாலும் வெற்றி முரசுக்
கொட்டுவான் பச்சை தமிழன்
தமிழ் மொழியை போற்றி வளர்த்தால்
நீ தான் நாளைய நாயகன் !

வெள்ளித்திரையில் மட்டும் தெரிபவன்
கருவின் கதை நாயகன்
உலகளவில் தமிழை உயர செய்தால்
நீ தான் நாளைய நாயகன் !!

Wednesday, January 16, 2008

அவள் ஒரு வரலாறு

அழகு நிலவே அழகு நிலவே
உலக வரலாறு நீயோ
அணுவாய் அணுவாய் என்னை கொள்கிறாய்
உன்னில் உலகம் தானோ
அணுகுண்டு விசும் அமெரிக்காவே
உன் அழகை பற்றி யோசிக்குதோ
அன்பே உந்தன் காலடியில்
உலக மாநாடு நடக்குதோ

அழகால் பலரை சர்வாதிகாரம் செய்கிறாய்
ஹிட்லர் வடிவில் புது பெண்ணோ !
அணல் பார்வையால் கொலைகள் நடத்துகிறாய்
முசோலினி வம்சம் தானோ !
அருவிப் போல உனக்கு துணிச்சலடி
பீடல் காஸ்ட்ரோ உறவு பெண்ணோ !
அதிகாரமாக உழைப்பை பற்றி பேசினாய்
கார்ல் மார்க்ஸ் வழி வந்தவளோ !!

உலக வரலாறு நீ தானோ
உலக தலைவர் உருவ சின்னமோ !

அகிம்சை முறையில் இம்சை செய்கிறாய்
காந்தி பேத்தி தானோ !
அமைதி புறாவை பறக்க விடுகிறாய்
நேருவின் ரசிகை மன்ற தலைவியோ !
அம்பு போல விரலை காட்டுகிறாய்
நேதாஜியின் இன்னொரு ராணுவமோ !
அன்னையாக அன்பு காட்டவே
இந்திரவாக நடைப்பெற்று வந்தாயோ !!

என் இந்தியா நீயடி
இந்திய உருவில் தேகமடி
எந்தன் தேசியகீதத்தில்
உந்தன் பெயர் மட்டுமே ஒலிக்குதடி !

அவ்வப்பொது கடவுளை பழிக்கின்றாய்
பெரியாரை உன்னில் கண்டேன் !
ஆற்றல் மிகு பேச்சிலே
அறிஞர் அண்ணாவை உன்ணர்தேன் !
தமிழிலே உந்தன் தமிழாலே
உன்னில் கலைஞரை பார்க்கிறேன் !
வெள்ளை நிறத்தில் கண்ணை பழித்தாய்
புது எம்.ஜி.ஆராக நான் வாழ்கிறேன் !!

வரலாறு படைத்த தலைவர்களை
உன்னில் நான் கண்டேன் !
என் எதிர்காலம் நீ தான்
உன்னிடம் சேர வந்தேன் !!
Free Web Counters
வந்தவர்கள்