Tuesday, December 02, 2008

காதல் கொடுத்த தேவதை

நட்பு என்று ஒரு புனிதம் உண்டு... காதலுக்கென்று புனிதம் உண்டு... இந்த இரண்டுக்கு இடைப்பட்ட உறவு என்றுமே குழப்பம் தான்..... மிகவும் கொடுமை கூட. அவளிடம் பழகுவது காதல் என்று மனம் சொல்லும். ‘நட்பை தவறாக நினைக்காதே’ என்று அறிவு எதிர் வாதம் செய்யும். இந்த குழப்பத்தில் எத்தனையோ இளைஞர்கள் மாட்டிடுக் கொண்டு இருக்க நான் மட்டும் விதி விளக்கா என்ன ?

நான் உன் வீட்டுக்கு வந்துயிருக்கிறேன்.... ஒரு நண்பனாக. நீயும் என் வீட்டுக்கு வந்திருக்கிறாய்... ஒரு தோழியாக. நாம் இருவரின் நட்பு நம் இரு வீட்டுக்கும் தெரியும். இப்பொது உன்னிடம் காதல் சொன்னால், நம் இரு வீடும் நம் இதுவரை பழகிய நட்பை என்னவென்று சொல்வார்கள் ?

நம் பெற்றோர்களை கூட சமாளித்து விடுவேன். நீ என்ன நினைப்பாய் ? இதுவரை நான் உன்னிடம் பழகிய நட்பை நீ தவறாக புரிந்துக் கொண்டால்.... நான் என்ன செய்வேன் ? உன்னிடம் பேசுவதே போதும் என்று நினைத்தாலும்.... சொல்ல வேண்டும் என்று என்னை தூண்டுகிறதே இந்த ‘காதல்’.

‘கடவுள் இல்லை’ என்று சொல்பவன் நான்.... திருநீர் நீ தருவதால் நெற்றியில் புசிக்ககொள்கிறேன். கோயிலுக்கு செல்லாததவன் நான்..... வியாழக்கிழமை ராகவேந்திர கோயிலுக்கு நீ வருவாய் என்பதற்காக நான் வருகிறேன். அவ்வப்போது நீ செய்யும் ஜாடைகள்.... என் மீது உனக்கு காதல் இருக்குமோ என்று நினைக்கும் லீலைகள்... பிறகு அது நட்பு என்று நீ சொல்லும் வார்த்தைகள்... உன் ஒவ்வொரு அசைவுகளையம் என் இதயம் செமிக்கும் வங்கி கணக்குகள்.

உன்னை காதலிக்கும் ஆடவர்களின் பெயர்களை என்னிடம் பட்டியலிட்டு சொல்கிறாய்..... நான் உன்னிடம் என் காதலை சொல்லிவிட்டால்... நானும் உன் பட்டியலில் வந்துவிடுவேனோ என்ற அச்சம் வந்தது.... இருக்கும் கொஞ்ச தைரியம் கூட போனது.

நீ நெருக்கமாக பழகும் ஆண்களை பற்றி சொல்கிறாய்.... எனக்கு பொறாமை ஏற்ற நீ செய்யும் உள் நோக்கமா என்ற சந்தேகம்... ஆனால், நண்பனிடம் தான் எல்லா உண்மையும் சொல்ல முடியும் என்று நீ சொல்லும் போது என் சந்தேகங்கள் எல்லாம் தவிடு பொடியானது.

ஜாடை வார்த்தைகளால் ‘காதல்’ என்று நினைக்க வைக்கிறாய்.... ‘காதல் மீது நம்பிக்கை இல்லை’ என்று சொல்லி உனக்கு காதல் வராது என்று நினைக்க வைக்கிறாய் !
பார்த்தவுடன் காதல் சொல்பவர்கள் உண்டு.... காதலுக்காகவே பெண்ணிடம் பழகி காதல் சொல்பவர்கள் உண்டு.... என் மனம் உன்னிடம் இதுவரை எதையும் எதிர்ப்பார்த்தில்லை. ஆனால் , காதல் தென்றல் வீசிய பிறகு.... நம் நட்பு புயலாக என்னை கொன்று கொண்டு இருக்கிறது. நட்பை கொன்று காதலை சொல்வதா ? காதலை மறந்து நட்பை வளர்ப்பதா ? காதல் வந்த பிறகு தினமும் என் மனதில் இதே போராட்டம் தான்.

திடிர் என்று ஒரு நாள் என்னடம் ஒரு கேள்வி கேட்டாய் “இப்போ ரொம்ப பேரு... பிரண்ட்ஸ் பழகி லவ்வர்ஸ் ஆகுறாங்ளே. அதப்பத்தி நீ என்ன நினைக்குற...?” என்றாய்.

இது தான் சரியான தருணம் நான் பதிலளித்தேன்.
“இன்னைக்கு பல பேர் கல்யாண வாழ்க்கையில எல்லோரும் நண்பர்கள் போல வாழனும் நினைக்கிறாங்க... யாரோ ஒருத்தரை இல்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணி நண்பர்கள் போல இருக்குறதக்கு... நமக் கூடவே நல்ல பழகினவங்கள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லனு நினைக்குறாங்க.... கல்யாணத்துக்கு அப்புறம் பிரண்ட்ஸீப் தொடரது நல்ல விஷயம் தானே !! ” என்றேன்.

என் பதில் கேட்டு என்னை பார்த்து மெல்ல சிரித்தாய். நம் நட்பு காதலாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நம் நட்பின் பயணத்தை தொடர்க்கின்றேன்.

2 comments:

நட்புடன் ஜமால் said...

\\“இன்னைக்கு பல பேர் கல்யாண வாழ்க்கையில எல்லோரும் நண்பர்கள் போல வாழனும் நினைக்கிறாங்க... யாரோ ஒருத்தரை இல்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணி நண்பர்கள் போல இருக்குறதக்கு... நமக் கூடவே நல்ல பழகினவங்கள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லனு நினைக்குறாங்க.... கல்யாணத்துக்கு அப்புறம் பிரண்ட்ஸீப் தொடரது நல்ல விஷயம் தானே !! ” என்றேன்.\\

அட்றா அட்றா அட்றா

ஆனா அப்படி ஒரு கேள்வி கேட்டாதானே இப்படி ஒரு சூப்பர் சூப்பர் பதிலை சொல்லலாம்.

வாழ்த்துக்கள்.

காதலை உள்ளே வைத்துக்கொண்டு நட்பை கலங்கப்படுத்தாமல்
வந்த காதலை நட்புடன் சொல்வது ஒரு அழகு தான்.

குகன் said...

நன்றி.. அதிரை ஜமால்.

//ஆனா அப்படி ஒரு கேள்வி கேட்டாதானே இப்படி ஒரு சூப்பர் சூப்பர் பதிலை சொல்லலாம்.//

இப்படி கேள்வி கேட்குற மாதிரி ஒரு சந்தர்ப்பத்த ஏற்ப்படுத்துங்க... இல்ல ஒரு சம்பவம் நடந்த மாதிரி ஒரு கதையா சொல்லுங்க... அப்புறம் பாருங்க பல கேள்விகள் வரும்.. :)

Free Web Counters
வந்தவர்கள்