Tuesday, December 02, 2008

ஜாதிக்கு இளமை குறையவில்லை

ஜாதியை ஒழிக்க வந்த மனிதர்கள்
வயதாகி இறந்தார்கள்
ஆனால்
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

பிறந்த நாள் சான்றிதழ்
பள்ளிக்கூட சான்றிதழ்
கல்லூரி சேர அனுமதி
திருமணத்துக்குப் பெண் பார்க்க
சுடுகாட்டில் புதைக்க
மனிதர்கள் வயதாகி இறந்தாலும்

ஜாதியை இளமை குறையாமல் வாழவைக்கிறார்கள்!

தமிழ் இளமையுடன் இருப்பதால்
தமிழர்களுக்குப் பெருமை!
ஜாதி இளமையுடன் இருப்பதால்
மனிதர்க்ள் வாழ்கையில் கொடுமை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

மனிதனின் இதயத்தில்
லட்சியம் விதைக்கப்பட்டிருந்தால்
பல வெற்றி மரங்களுக்கு
விதைகள் போட்டிருப்பான்!

மனிதனின் இதயத்தில்
ஜாதி விதைக்கப் பட்டதால்
பல ஜாதி சங்கங்களைத்
தொடங்கி வருகிறான்!

விதைத்த ஜாதியை
வேருடன் அழிக்க
மனிதன் மனிதர்களை
வெட்டி அழித்துக் கொண்டார்கள்
இறந்தது மனிதர்கள் மட்டும் தான்
ஜாதிகள் இல்லை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 25வது கவிதை

6 comments:

கோவி.கண்ணன் said...

//விதைத்த ஜாதியை
வேருடன் அழிக்க
மனிதன் மனிதர்களை
வெட்டி அழித்துக் கொண்டார்கள்
இறந்தது மனிதர்கள் மட்டும் தான்
ஜாதிகள் இல்லை!//

அருமையான வரிகள். உண்மை !

குகன் said...

நன்றி.. கோவி.கண்ணன் :)

குகன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

ஆசை, அவா என்கிற அழுக்குகள்
மனிச மனசில இருக்கிற மட்டும்
ஜாதி என்கிற அழுக்கும்
சமூகத்தில இருந்துக்கிட்டே தான் இருக்கும்.

தேவன் மாயம் said...

தமிழ் இளமையுடன் இருப்பதால்
தமிழர்களுக்குப் பெருமை!
ஜாதி இளமையுடன் இருப்பதால்
மனிதர்க்ள் வாழ்கையில் கொடுமை!
அருமை நண்பரே!!!!!!
தேவா.

குகன் said...

நன்றி.. தேவா :)

Free Web Counters
வந்தவர்கள்