Monday, November 03, 2008

என் புத்தம் புதியவளே

புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !
காதல் உணர்வைக் காட்டிய
எனக்கு நீ புதியவளே !
புதிய உறவை தந்த
காதலி நீ புதியவளே !
புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் பார்வையில் மௌனம் ஆனேன்
அது எனக்கு புதியது !
உன் நினைவில் தூக்கம் மறந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள்ளே நான் பேசிக் கொண்டேன்
அது எனக்கு புதியது !
தனியாகச் சிரித்து வழிந்தேன்
அது எனக்கு புதியது !
எனக்குள் பல புதுமைகள் செய்தவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

முதல் முதலாய் வெட்கம் வந்தது
அது எனக்கு புதியது !
உன் கண்ணில் என்னை பார்த்தேன்
அது எனக்கு புதியது !
காதலி உன் கொலுசின் ஓசை
அது எனக்கு புதியது !
நீ இல்லாமல் நான் வாழ்ந்தால்
அந்த தனிமை கூட புதியது !
எனக்கு புதிராய் விளங்குபவளே !
என் புத்தம் புதியவளே !
புதிதாய்ப் பூத்தவளே !

திருமண ஆசையில் துடித்தேன்
அது எனக்கு புதியது !
நான் போடும் மூன்று மூடிச்சு
அது எனக்கு புதியது !
காதலி எனக்கு மனைவி ஆனாய்
அது எனக்கு புதியது !
உன்னுடன் நான் இருக்கும்
அந்த முதலிரவு புதியது !
எனக்கு என்றும் இனியவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

உன் உயிரை எனக்குள் வைத்தேன்
அது எனக்கு புதியது !
ஓர் உடலில் இரு உயிர் ஆனேன்
அது எனக்கு புதியது !
முத்த மழையில் நான் குளித்தேன்
அது எனக்கு புதியது !
உன் பிரிவில் நான் இறந்தால்
அந்த மரணம் கூட புதியது !
எனக்கு உயிராய் வந்தவளே !

என் புத்தம் புதியவளே !
புதிதாய் பூத்தவளே !

3 comments:

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

//உன் பிரிவில் நான் இறந்தால்
அந்த மரணம் கூட புதியது //

நல்ல கவிதைவரிகள்!!!

குகன் said...

நன்றி சுடர்மணி :)

Anonymous said...

புதுமையாகவே தொடங்கும் காதல் புதுமையாக என்றும் இருக்கட்டும். மரணம் எப்போதும் துயரம்தானே.

ஆக வாழும்வரை வாழ்வே இனிதாக வாழ்த்துக்கள் குகள்.

சாந்தி

Free Web Counters
வந்தவர்கள்