Friday, December 19, 2008

என் பார்வையில் அண்ணா

பகுத்தறிவு பெரியார் பேச்சில் - செருப்பை
பரிசாய் பெற்ற போது…
பக்குவமாய் பேசி - மக்களிடம்
பல கை தட்டல்கள் பெற்றவர் !

பயணங்களில் நண்பர்களை தவிர்த்து
புத்தங்களை நண்பர்களாக கொண்டவர் !
பதவி வந்ததும் தன் சம்பளத்தை
பாதியாய் குறைத்து ஆடம்பரத்தை தவித்தவர் !

சுயமரியாதை திருமணத்தை
சட்டமாய் அரங்கேற்றியவர் !
சென்னைக்கு ‘தமிழ் நாடு’ பெயரிட்டு
சரித்திரப் பக்கங்களில் முத்திரை பதித்தவர் !
தள்ளி இருந்த திருவள்ளுவரை
திரும்பும் அரசு அலுவலகத்தில் மாட்டியவர் !
பேச்சும், எழுத்தும் தன் கட்சியின்
பெரும் சொத்தாக கருதியவர் !

நித்திரை பொழுதிலும்
முத்திரை பேச்சால்
ஒவ்வொரு இரவும் நினைவில் நின்றார் !
தீ பறக்கும் முயற்சியால்
தமிழர்கள் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றினார் !

'அண்ணா' என்ற உறவு
அண்ணாதுரை பெயரால் சிறப்பானது !
திராவிடக் கழகத்தால்
தமிழனின் முத்கெலும்பு நிமிர்ந்தது !

நூறு கவிஞர்கள் எழுதிய 'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' என்ற தொகுப்பு நூலில் இக்கவிதை இடம் பெறுகிறது.

1 comment:

Thamizhan said...

அண்ணாவின் பேச்சைக் கேட்டே
அறிஞர் என்றார் கல்கி!
அண்ணாவின் செயலைக் கண்டே
தளபதி என்றார் தமிழர்!
அண்ணாவின் அறிவைக் கண்டோர்
தென்னாட்டு பெர்னார்ட்சா என்றார்!
அடக்கத்தில்,எளிமையில்,எண்ணத்தில்
அன்பில்,பாசத்தில் மயங்கியே
அண்ணா என்றது தமிழினம்.

Free Web Counters
வந்தவர்கள்