ருசி பார்க்க பற்களில்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
ஆதரவாய் பேச பிள்ளைகளும் இல்லை
முதியோர்களுக்குக் கிடைத்தது
முதியோர் இல்லம் என்னும்
திறந்த வேலி சிறைவாசம் !
ஆயுள் முடியும் காலத்தில்
ஆயுள் முடியும் வரை
இங்கு உள்ளவருக்கு விடுதலையில்லை !
பிள்ளைகளின் குடை
நிழல் கொடுக்க மறுக்க
திறந்த இடத்தில்
நிழலை தேடுகிறார்கள் !
தவளமும் வயதில்
நடைபயில கைகள் தேடினான் !
பத்து வயதில்
விளையாட நண்பர்கள் தேடினான் !
வாலிப பருவத்தில்
கன்னி மனதில் இடம் தேடினான் !
தந்தையானதும் பிள்ளைக்கு
பள்ளியில் இடம் தேடினான் !
வேலை ஓய்வுக்கு முன்பு
தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடினான் !
இறுதிவரை முதியோர் இல்லத்தில் இருக்கும்
அவன் பெற்றோரைத் தேடவில்லை !
ஆனால்,
அவன் இறுதி மூச்சு பிரிந்தது
முதியோர் இல்லத்தில் தான் !
- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 11வது கவிதை
Wednesday, September 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
மூதியோர்?
முதியோர் என்று இருக்க வேணாமா?
//மூதியோர்?
முதியோர் என்று இருக்க வேணாமா?//
அதானே, நாகர்கோவில் பக்கம் "மூதி" என்றால் அர்த்தமே வேறு.
// முதியோர் என்று இருக்க வேணாமா?//
மாற்றிவிட்டேன். என் பிழையை சொன்னதற்கு நன்றி.
Post a Comment